twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனிதநேயம்.. கலைஞர்களுக்கு எம்.எஸ்.வி. அறிவுரை

    By Staff
    |

    Sureshiver with Suvatha
    எவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தாலும் மனித நேயத்துடன் வாழ்வது முக்கியம். இதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும், என்றார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.

    மெகா தொலைக்காட்சி சார்பில், 'ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்' என்ற பெயரில் விஜிபி தங்க கடற்கரையில் கோடை திருவிழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    என் பாடலின் நண்பர் ஆர்மோனிய பெட்டிதான். பாட்டுக்குத்தான் தபேலா வாசிக்க வேண்டுமே தவிர, தபேலாவிற்கு பாட்டுப் பாடக் கூடாது.

    எவ்வளவு பெரிய கலைஞனாகவும் ஒருவர் இருக்கலாம். ஆனால் மனிதநேயம்தான் இறுதியில் அவரை அடையாளம் காட்டும்.

    முன்னோடிகளை மதித்து, எல்லோரும் சந்தோஷத்துடன், சங்கீதத்துடன், அடக்கத்துடன், நன்றி கடனுடன் வாழ வேண்டும் என்று கலைஞர்களுக்கு தமது பாடலுடன் அறிவுரை வழங்கினார்.

    இந்த கோடை திருவிழாவில், சின்னத்திரை நட்சத்திரங்கள், டிங்கு-கவி, சுரேஷ்வர்-ஸ்வேதா, ராகவ்-ப்ரீத்தா, ராஜ்காந்த்-கிருத்திகா ஜோடி குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சாதக பறவைகளின் இசைக்குழுவினரின் மெல்லிசைக் கச்சேரியும் இடம்பெற்றது. இதில் மாணவ மாணவிகள் மேடையேறி பாடல்களைப் பாடினர்.

    மனோ, சிவகார்த்திகேயன், தனசேகரன் குழுவினர் தங்களது பலகுரல் வித்தைகள் மூலம் நேயர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜார்ஜ் மற்றும் பிருந்தாதாஸ் தொகுத்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, விஜிபி சந்தோஷ், மெகாடிவி நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தங்கபாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X