»   »  ஐந்தாண்டு கழித்து அரசியல்! - சோனா பகீர்!

ஐந்தாண்டு கழித்து அரசியல்! - சோனா பகீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sona
ஐந்தாண்டுகள் கழித்து அரசியலில் இறங்குவது பற்றி பரிசீலிப்பேன் என்று அதிரடி குண்டு வீசியுள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.

தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கிய நாளிலிருந்தே கவர்ச்சி நடிகை சோனா அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தை 'ஆண்களை நம்பாதே' என்பதுதான்.

நடிகையாக இருந்து, இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ள சோனா, தனது ஆரம்பகால கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறார்.

"இப்போது இரு படங்களை தயாரிக்கிறேன். அந்தப் படங்கள் முடிந்ததும் இயக்குநராகப் போகிறேன்.

எனக்கு எப்போது திருமணம் என்று பலர் கேட்கின்றனர். அது பற்றி சிந்திக்கவே இல்லை. ஆண்களை நான் நம்பமாட்டேன். நண்பர்கள் ஓகே... ஆனால் புருஷன்கள் துரோகிகள். அவர்களை நம்பக்கூடாது.

அதற்கு என் வாழ்க்கையே ஒரு உதாரணம். அதைப் படமாக எடுக்கும் திட்டம் உள்ளது.

எனக்கு இப்போதைக்கு அரசியல் வேண்டாம். எந்தக் கட்சியாவது என்னை வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய அழைத்தாலும் போகமாட்டேன். ஆனால் இது நிரந்தர முடிவல்ல... 5 ஆண்டுகள் கழித்து அரசியலில் ஈடுபடுவது பற்றி யோசிப்பேன்..." என்றார் அதிரடியாக.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil