»   »  ஷார்ஜாவில் இன்று மெகா ஸ்டார் நைட்-2008

ஷார்ஜாவில் இன்று மெகா ஸ்டார் நைட்-2008

Subscribe to Oneindia Tamil
Neeba
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடப்படுகிறதோ இல்லையோ அவ்வப்போது ஏதாவது நட்சத்திர விழாக்கள் நடக்கின்றன.

இந்த முறை தமிழ் திரை நட்சத்திரங்களை வைத்து மெகா ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடக்கிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் இந்த நிகழ்ச்சியில் வைகைப் புயல் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, ஷாம், நமீதா, பூஜா, மஹதி, கானா உலகநாதன், ரெஷ்மி, மாணிக்க விநாயகம், பரவை முனியம்மா, சிட்டி பாபு, மகேஸ்வரி, ராபர்ட், நீபா, மஹேந்திரன் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலக்கவுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூலை முடுக்கெல்லாம் இந்த ஸ்டார் நைட் குறித்துத்தான் பேச்சு. நமீதா வருகிறார் என்று விளம்பரம் செய்யப்பட்டதால் டிக்கெட் விற்பனை படு சூடாக நடந்து முடிந்திருக்கிறது.

Please Wait while comments are loading...