twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நார்வே தமிழ் திரைப்பட விழா: வெங்காயம், வாகை சூட வா உள்பட 15 தமிழ்ப் படங்கள் தேர்வு

    By Shankar
    |

    தமிழ் சினிமாவுக்கென்றே சர்வதேச அளவில் நடக்கும் நார்வே திரைப்பட விழாவில் பங்கேற்க 15 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

    வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி முதல் - 29-ம் தேதி வரை ஐந்து நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

    வசீகரன் இசைக்கனவுகள், அபிராமி கேஷ் அண்ட் கேரி ஆதரவோடு, இம்முறை நார்வேயைச் சேர்ந்த அமைப்புகள் சில இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

    இதுகுறித்து திரைப்பட விழா குழு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

    மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ள இந்த நார்வே தமிழ் திரைப்பட விழா குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தமிழ்ப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இதில் பங்கேற்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். தங்கள் படங்களை போட்டிக்காக அனுப்பி வைத்துள்ளனர். குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களுடைய படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

    இவ்வாறு கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள், திரைப்பட விழா குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து 15 படங்களை குளோரியா செல்வநாதன் (ஜெர்மனி) தலைமையிலான 7 பேர் கொண்ட நார்வே தமிழ் திரைப்பட விழா குழு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

    தேர்வாகியுள்ள படங்கள்:

    நார்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2012

    01.அழகர்சாமியின் குதிரை
    02.வெங்காயம்
    03.வாகை சூடவா
    04.கோ
    05.ஆரண்ய காண்டம்
    06.தீராநதி - பிரான்ஸ்
    07.எங்கேயும் எப்போதும்
    08.போராளி
    09.மயக்கம் என்ன
    10.பாலை
    11.உச்சிதனை முகர்ந்தால்
    12.வர்ணம்
    13.மகான் கணக்கு
    14.ஸ்டார் 67 (Star 67 - கனடா)
    15.நர்த்தகி

    இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் குறித்த விவரம் வரும் 25.02.2012 அன்று வெளியாகும். இந்த விழாவில் தமிழர் விருதுக்கான போட்டியில் பங்குபெறாமல், விசேஷ பிரிவில் சுபாஷ் கலியன் இயக்கிய பாலம் கல்யாணசுந்தரத்தின் ஆவணப்படம், அன்னக்கிளி ஆர் செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான பச்சைக்குடை போன்ற படங்கள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் பெரும் முயற்சி இது. இந்த முயற்சி முழுமையான வெற்றியை அடைய, இந்தி சினிமாவின் உலகளாவிய வீச்சு மற்றும் வர்த்தகத்தை மிஞ்சும் வகையில் தமிழ் சினிமா படைப்புகள் அமைய, தமிழ் சினிமாவின் அனைத்து படைப்பாளிகளையும், துணை நிற்குமாறு வேண்டுகிறோம்.

    இந்த திரைப்பட விழா என்பது ஏதோ தனிப்பட்ட ஒரு நிகழ்வு என்று எண்ணாமல், தமிழ் சினிமாவை கவுரவப்படுத்தும், உலக அளவுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகக் கருதி இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    -இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    The juries of Norway Tamil Film Festival have selected 15 Tamil movies, including Vengayam, Vaagai Sooda Vaa, Azgarsamiyin Kuthirai for its 2012 edition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X