For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜீவாவுக்கு புகழாரம்!

  By Staff
  |

  Jeeva
  தாம் தூம் படத்தின் இயக்குநரும், பிரபல ஒளிப்பதிவாளருமான ஜீவாவுக்கு, அப்படத்தின் குழுவினர் புகழாரம் சூட்டி கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்.

  மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கிய தாம் தூம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜீவா ரஷ்யாவில் திடீரென மறைந்து விட்டார். இருப்பினும் படக்குழுவினர் சீரிய முறையில் ஒத்துழைத்து படம் குறிப்பிட்ட தேதிக்குள் முடிய ஒத்துழைத்தனர். இதனால் படம் திரைக்கு திட்டமிட்டபடி வருகிறது.

  தாம் தூம் படம் குறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் படத்தின் சில காட்சிகளையும், பாடல்கள் சிலவற்றையும் போட்டுக் காட்டினர். மேலும் இந்தப் படத்தைக் கொண்டு வர தாங்கள் பட்ட சிரமத்தையும் எடுத்துரைத்தனர். மறக்காமல் ஜீவாவை அனைவருமே நினைவு கூர்ந்தனர்.

  நாயகன் ஜெயம் ரவி, நாயகி கங்கனா ரனவத், லட்சுமி ராய் ஆகியோர் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

  ஜெயம் ரவி கூறுகையில், ஜீவா ஒரு அரிய கலைஞர். படத்தின் முதல் பாதி முழுவதும் கிராமத்து அமைதியான வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் இருருக்கும். இரண்டாம் பகுதி, அதிரடியாக இருக்கும். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும், எடிட்டிங்கும் அதிரடியாக, அதி வேகமாக இருக்கும் என்றார்.

  லட்சுமி ராய் கூறுகையில், தமிழ்ப் படங்களுக்கு நான் மீண்டும் வரக் காரணம் ஜீவாதான். இதற்காக நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். எனக்கு புதிய முகவரியைக் கொடுத்தவர் ஜீவா. அவருடன் நான் செயல்பட நேரிட்டது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றார்.

  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் கூறுகையில், எப்படி இந்தப் படத்திற்கு இசையமைக்கப் போகிறோம் என்று எனக்கு முதலில் புரியவே இல்லை. காரணம், வழக்கமாக நான் ஜீவாவுடன் சேர்ந்து உட்கார்ந்து நீண்ட நேரம் பேசி அதன் பின்னர்தான் பின்னணி இசைக்குப் போவேன். ஆனால் இன்று ஜீவா இல்லை. ஜீவா இல்லாமலேயே இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளேன் என்றார்.

  கங்கனா ரனவத் பேசுகையில், நான் 20 நாட்கள்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இருப்பினும் ஜீவாவை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அவரது மரியாதையான செயல்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்தன.

  தொழில் மீது மிகுந்த பக்தி கொண்டவர் ஜீவா. யூனிட் உறுப்பினர்கள் மீது மிகுந்த பாசமாக இருப்பார். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அவரது ஒர்க்கிங் ஸ்டைல், அணுகுமுறை ஆகியவற்றைப் பார்த்த பின்னர்தான் நான் தொடர்ந்து தமிழில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். எனக்கு ஆதர்சமாக இருந்தவர் இப்போது இல்லை என்றார் உருக்கமாக.

  ஜீவா இல்லாத நிலையில் ஒளிப்பதிவை ஜி.கே. மணிகண்டன் பார்த்துக் கொண்டார். உதவி இயக்குநராக இருந்த ராஜசேகர் ஜீவாவின் ஸ்டைல் குறையாமல் முடித்துள்ளார். ஜீவா ஒரிஜினலாக திட்டமிட்டிருந்தது போலேவே படமும் முடிந்துள்ளதாம்.

  படத்தை வெற்றிகரமாக முடிக்க தயாரிப்பாளர்கள் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், அய்ங்கரன் இன்டர்நேஷனல், மெட்ரோ பிலிம்ஸ் ஆகியோர் ஒத்துழைத்துள்ளனர்.

  காஸினோ ராயல் புகழ் ஸ்டண்ட் டைரக்டர் கிறிஸ் ஆண்டர்சன் படத்தின் சண்டைக் காட்சிகளை, கனல் கண்ணனுடன் இணைந்து செய்துள்ளார் என்றார்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X