தாயாரின் கோரிக்கையை ஏற்று நீச்சல் உடைக்கு கரீனா குட்பை

பாலிவுட்டின் கலக்கல் நாயகிகளில் ஒருவர் கரீனா கபூர். கவர்ச்சியிலும், நடிப்பிலும் பின்னி எடுப்பவர். இப்போது சைப் அலி கானுடன் நட்பாக இருக்கிறார்.
கரீனா கபூர் தனது தாயார் பபிதா மீது உயிரையே வைத்திருப்பவர். அம்மாவுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர். இந்த நிலையில், தனது தாயாரின் ஒரு கோரிக்கையை மறு பேச்சின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறாராம் கரீனா.
அது இனிமேல் பிகினி அணிந்து நடிக்காதே என்ற கோரிக்கையை.
இதுகுறித்து அவர் கூறுகையில், டஷான் படத்தில் நான் டூ பீஸ் பிகினி அணிந்து நடித்ததை தான் ரசிக்கவில்லை என்று அம்மா கூறினார். மேலும் பிகினி அணிவதை விடலாமே என்றும் கேட்டுக் கொண்டார்.
அப்போதே இனிமேல் பிகினி அணிய மாட்டேன் என அவரிடம் உறுதியளித்து விட்டேன். எனக்கு பிகினி பிடிக்காது என்று கூற மாட்டேன். பிகினி அசவுகரியமாக இருக்கிறது என்றும் கூற மாட்டேன். ஆனால் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. எனவே இனி பிகினி அணிய மாட்டேன்.
தற்போது நடித்து வரும் 3 இடியட்ஸ், ரென்சில் டிசில்வாவின் புதிய படம் ஆகியவற்றில் மிதமிஞ்சிய கவர்ச்சிக் காட்சிகள் எனக்கு வைக்கப்படவில்லை.
என்னையும், எனது சகோதரியையும் வளர்த்து ஆளாக்க எனது தாயார் தனது நடிப்புத் தொழிலையே விட்டவர். பல தியாகங்களைச் செய்தவர். அவருக்காக இதைக் கூட செய்யாவி்ட்டால் எப்படி என்கிறார் கரீனா.


Click it and Unblock the Notifications











