twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்றரை மாதத்தில் 16 படங்கள்... தேறியவை மூன்று மட்டுமே!

    By Shankar
    |

    2010-ல் 150 தமிழ்ப் படங்கள் வந்தன. அவற்றில் 90 சதவீதம் தோல்விப் படங்கள்... ஜெயித்தவையோ குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் தயாரித்த படங்கள் மட்டுமே!

    2011-லாவது இந்த நிலை மாறுமா என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    ஆனால் ஆரம்பமே அவர்களுக்கு பெரும் தடுமாற்றமாக உள்ளது. புத்தாண்டு தொடங்கி, கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 16 படங்கள் திரைக்கு வந்துள்ளன.

    அடுத்து வரும் பிப்ரவரி 18-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் நடுநிசி நாய்கள், ஆடுபுலி, காதலர் குடியிருப்பு மற்றும் மார்கழி 16 ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இவற்றையும் சேர்த்தால் ஒன்றரை மாதங்களில் 20 படங்கள் கணக்கு வருகிறது.

    இவற்றில் இதுவரை வெளியான 16 படங்களின் பாக்ஸ் ஆபீஸ் முடிவு என்று பார்த்தால், பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    வெற்றிப் படங்கள் என்று பார்த்தால் காவலன் மட்டுமே மிஞ்சுகிறது. யுத்தம் செய், பயணம் ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லை என்ற ரகம்தான். மீதிப் படங்கள் அனைத்துமே பப்படமாகியுள்ளன.

    இப்போது வெளியாகவிருக்கும் நான்கு படங்களிலும் கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள் மட்டுமே ஓரளவு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அது கூட கவுதம் மேனன் திட்டமிட்டு செய்துவரும் விளம்பரங்களால். அது எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என்பது படம் வந்த பிறகு வெளிச்சமாகிவிடும். அப்போது இந்த எதிர்ப்பார்ப்பும் இருக்குமா என்பது சந்தேகமே.

    ஏன் இந்த நிலை தொடர்கிறது?

    "பெரும்பாலான இயக்குநர்களுக்கு சொந்த சரக்கில்லை. சமீபத்தில் வெளி வந்த ஒரு த்ரில்லர் படம், மூன்று ஆங்கிலப் படங்களின் அப்பட்டமான தழுவல். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது. எந்த ஹாலிவுட் படமாவது தமிழ்நாட்டுப் படத்தை... அட குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக் கதையை மையப்படுத்தி வந்துள்ளதா... ஆனால் 90 சதவீத தமிழ்ப் படங்கள் ஹாலிவுட் / கொரிய / ஜப்பானிய/ மெக்சிகன் படங்களின் அப்பட்டக் காப்பியாகவே இருக்கின்றன. இப்படி அந்நியமாக உள்ள கதைகள் எங்கே மக்களைச் சென்று சேரப்போகின்றன", என்கிறார் பிரபல விநியோகஸ்தர் -கம்- தயாரிப்பாளர் ஒருவர்.

    சொந்த சரக்குதான் சினிமாவாகணும்னா, வருஷத்துக்கு இரண்டு டஜன் படங்கள் தேறுவதே கடினமாச்சே!!

    English summary
    There are 20 films would have released in seven Fridays in 2011, an average of almost three films a week. The success ratio among the 16 films released so far (till Feb 14) is that one of them is a super hit, two will recover their cost and the rest 13 of them are big losers. Trade people say that the quality of content is poor and they have noticed that the audiences are ignoring most of the new releases.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X