Don't Miss!
- News
"கேங்மேன்" பணிகள்.. திருநங்கைகளுக்காக முதன் முறையாக விதிகளை தளர்த்திய இந்திய ரயில்வே.. சூப்பர்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஐஸ்வர்யா ராய்க்கு பன்றி காய்ச்சல் அறிகுறி!

ஜஸ்வர்யா ராயின் மாமனாரான நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அமர் சிங்கை சந்தித்து, உடல் நலம் விசாரித்த அமிதாப் சிங்கப்பூரில் இருந்தபடியே தனது பிளாக்கில், ஐஸ்வர்யா ராய்க்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதாக எழுதியுள்ளார்.
அதில், ஐஸ்வர்யாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சலும், சளி தொந்தரவும் அதிகரித்தது. பன்றி காய்ச்சல் அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது.
அவர்கள் உடல்நலக் கோளாறால் அவதிப்படும்போது அவர்கள் அருகில் என்னால் இருக்க முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
ஒரே நாளில் 152 பேர் பாதிப்பு...
இதற்கிடையே நேற்று வரை பன்றி காய்ச்சலுக்கு நாடு முழுவதும் 29 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 152 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 60 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். மேலும், புனே 18, டெல்லி மற்றும் சென்னை தலா 11, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரில் தலா 10 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,707 ஆக உயர்ந்துள்ளது.