twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதிராஜா அலுவலகம் சூறை!

    By Staff
    |

    Bharathiraja
    சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை நேற்று இரவு மர்ம கும்பல் தாக்கி பெரும் சேதம் ஏற்படுத்தியது.

    இதனால், திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஆர்.சுந்தரராஜன், சீமான் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

    சென்னை ஜெமினி பார்சன் வளாகத்தில் பாரதிராஜாவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் தளத்தில் சினிமா எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள் நடைபெறும். முதல் தளத்தில் பாரதிராஜாவின் அலுவலகம் உள்ளது.

    நேற்று இரவு 8 மணிக்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பலினர் பாரதிராஜாவின் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் முதலில் கீழ்தளத்தில் டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகள் நடக்கும் 5 அறைகளை அடித்து நொறுக்கினார்கள்.

    சத்தம் கேட்டு மேல் தளத்தில் இருந்த பாரதிராஜாவின் உதவியாளர் மகேஷ், ஆபீஸ் பையன் ராம்கி ஆகியோர் ஓடிவந்தனர்.

    அவர்களை தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மிரட்டியது. இதனால் அவர்கள் ஒதுங்கி நின்றுகொண்டனர்.

    பின்னர் மேல்தளத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்தையும் அறையையும் அடித்து நொறுக்கினார்கள். அதன்பிறகு அங்கிருந்து சாவகாசமாக தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் பற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாரதிராஜாவின் உதவியாளர் மகேஷ், கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்து அங்கு வந்த இயக்குநர் சுந்தரராஜன், இந்த தாக்குதல் குறித்த தனது அதிர்ச்சியைத் தெரிவித்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:

    சோனியாகாந்தி சென்னை வரும்போது இயக்குநர் பாரதிராஜாவும், நானும் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.

    ஈழத் தமிழரைக் காக்க காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கடந்த ஒருமாதமாக பிரச்சாரம் செய்தோம்.

    அதன் விளைவுதான் இது. அடுத்து என் வீடும், சீமான் வீடும், ஆர்.கே.செல்வமணி வீடும் தாக்கப்படலாம் என்றார்.

    இதையடுத்து இயக்குநர்கள் சீமான், சுந்தரராஜன் மற்றும் செல்வமணி வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணை கமிஷனர் மௌரியா தெரிவித்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X