twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துணை நடிகை பூஜா தற்கொலை முயற்சி

    By Staff
    |

    ஆட்டோ டிரைவரை மணக்க முயன்று முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்த துணை நடிகை பூஜா, மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை போளூரை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகள் பூஜா (வயது 21). தெனாவெட்டு, அதிசயமணல் மாதா உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் படப்பிடிப்புக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரை யாரோ கடத்திவிட்டதாக தாயார் காமாட்சி வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் பூஜா மாயமானதாக வழக்குபதிவு செய்து, தேடினர். இந்தச் செய்தி பரபரப்பாக பேசப்படவே, ஜெகன் என்ற ஆட்டோ டிரைவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து, 'பூஜா கடத்தப்படவில்லை, என்னுடன்தான் வந்தார். இப்போது புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார்' என்று கூறினார்.

    உடனே புதுக்கோட்டை விரைந்த போலீஸ், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தது. இத்ல், பூஜாவுக்கு திருமணமாகி திலீப்குமார் என்ற கணவனும், லட்சுமி என்ற 3 வயது பெண் குழந்தையும் இருப்பதாகத் தெரிய வந்தது.

    திருமணத்துக்கு முன்பே ஜெகனை தீவிரமாக காதலித்துள்ளார் பூஜா. இப்போது அவரையே திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் புதுக்கோட்டைக்கு 2 பேரும் சென்றார்களாம்.

    இப்போது ஜெகனுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டாராம் பூஜா. ஆனால் ஜெகன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

    'உல்லாசமாக இருக்கலாம் என்பதால்தான் நான் பூஜாவுடன் புதுக்கோட்டைக்குச் சென்றேன். ஆனால் அவரைக் கல்யாணம் செய்வதெல்லாம் முடியாத காரியம். எனக்கு அதில் இஷ்டமில்லை. மீறி கட்டாயப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு ஏற்கெனவே மனைவி குழந்தைகள் உள்ளனர்' என கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஜெகன்.

    தலையிலடித்துக் கொண்ட போலீஸ், ஜெகனை எச்சரித்து அனுப்பியது. பூஜாவுக்கும், 'தயவு செய்து இந்தமாதிரி புகாரில் எல்லாம் சிக்க வேண்டாம்' என புத்திமதி கூறி அனுப்பி வைத்தது.

    தாயாருடன் வீடு திரும்பிய பூஜா, ஜெகனை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என முடிவு செய்து அவருடன் போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் ஜெகன் போனை எடுக்கவே இல்லை என்று தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த பூஜா நேற்று இரவு தூக்க மாத்திரை உள்பட ஏகப்பட்ட மாத்திரைகளை மொத்தமாக விழுங்கி விட்டார்.

    சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அவரை வீட்டில் உள்ளவர்கள் தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X