twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நஷ்டம்-ரஜினிக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!

    By Staff
    |

    Rajini
    சென்னை: குசேலன் படத்தால் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை தயாரிப்பாளர்கள் கே. பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் திருப்பி தர ரஜினி உதவ வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பன்னீர் செல்வம், காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. பழனியப்பன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது:

    குசேலன் படத்தில் எனது பங்கு 25 சதவீதம்தான் என ரஜினி கூறினார். ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் நேரத்தில், இது ரஜினி படம், அவர் படம் முழுக்க வருகிறார் என இயக்குனர் வாசு தெரிவித்தார்.

    படத்தை திரையிட நாங்கள் வாங்கும்போதும் வாசு இதையே கூறினார். எனவே அதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கினோம். தமிழகம் முழுவதும் 375 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது.

    ஆனால் படம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் வசூல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இதைச் சரிகட்ட நாங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கொடுத்த தொகையை சதவிகித கணக்கு வைத்து, 'மினிமம் கியாரண்டி' தொகையை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு, மீதித் தொகையை திருப்பித் தருமாரு கோருகிறோம்.

    ரஜினி தலையிட வேண்டும்:

    இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களை விட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான் நாங்கள் அதிகம் நம்புகிறோம். இந்தப் படத்தில் தன்னுடைய பங்களிப்பு குறித்து அவர் ஏற்கெனவே தெளிவாகக் கூறியும், அதை எங்களிடம் தவறாகச் சொல்லி வியாபாரம் செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.

    இது நல்ல படம்தான். ஆனால் தவறாக வியாபாரம் செய்யப்பட்ட படம். அதுதான் பிரச்சினையே!

    எனவே மனித நேயமிக்க சூப்பர்ஸ்டார் ரஜினி சார் இதில் தலையிட்டு எங்களுக்கு பணத்தை வாங்கித் தர வேண்டும், என்றார் பன்னீர் செல்வம்.

    ரஜினி இந்தப் படத்தில் கவுரவ நடிகர்தானே... அப்படியே கதாநாயகனாக இருந்தாலும், அவரிடம் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரக் கேட்பீர்கள்? என்ற நிருபர்களின் கேள்விக்கு, நீங்கள் சொல்வதை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் இப்போதும் ரஜினி சாரிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களிடம் எங்களால் நியாயமாகப் பணத்தைப் பெற முடியுமா எனத் தெரியவில்லை. எனவேதான் ரஜினி சார் இதில் தலையிட வேண்டும் என்கிறோம். அவருக்கு எங்களைப் போன்றவர்களின் கஷ்டம் தெரியும்.

    பாபா படத்தில் நாங்கள் கேட்காமலே கூப்பிட்டுப் பணத்தைக் கொடுத்தார் ரஜினி. இப்போது சொல்கிறோம், பாபா தோல்விப் படமல்ல. அதற்கே நஷ்ட ஈடு கொடுத்தவர்தான் ரஜினி. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் காதுகளுக்கு இந்த விஷயம் போக வேண்டும், இந்த வியாபாரத்தில் நடந்த உண்மையான விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, என்றார்.

    படத்துக்கான நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் கலந்து ஆலோசிக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பி. கண்ணப்பன், பொருளாளர் ஆர். சுந்தர் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

    ரூ.10 கோடி உத்தரவாதம்:

    இந்தப் படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.10 கோடியை திருப்பித் தருவதாக ரஜினிகாந்த் ஏற்கெனவே பிரமிட் சாய்மிராவிடம் உறுதியளித்திருந்ததை நேற்று வெளியிட்டிருந்தோம்.

    இந்நிலையில் அந்தத் தொகையில் தங்களுக்கான பங்கு உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X