Don't Miss!
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லிங்குசாமிக்கு தமன்னா தந்த 'ஷாக்'
சினிமாவைப் பொறுத்தவரை பணம்தான். நன்றி என்பது சினிமாவுக்கு ஒத்துவராத வார்த்தை என்பது பல சினிமாக்காரர்களின் பொதுவான கருத்து. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளதாம் சமீபத்தில்.
இயக்குநர் லிங்குச்சாமியின் படம் பையா. இதில் முதலில் நாயகியாக நடிக்கவிருந்தது நயனதாராதான். அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக முதலில் பேசியிருந்தார் லிங்குச்சாமி. ஆனால் நயனதாராவின் படங்கள் வரிசையாக ஊற்றிக் கொண்டதால் சம்பளத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அதை நயனதாரா ஏற்கவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சினை வெடித்தது. இறுதியில் நயனதாரா நீக்கப்பட்டார். தமன்னா அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
பையா பெரும் வெற்றி பெற்றது, தமன்னாவுக்கும் செமத்தியான பெயர் கிடைத்தது. இப்போது லிங்குச்சாமி அடுத்து வேட்டை படத்தை இயக்கவுள்ளார். இதில் நாயகியாக நடிக்குமாறு தமன்னாவை அணுகினார். பையா வெற்றிப் படத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் குறைநந்த சம்பளத்தில் நடித்துத் தருவார் தமன்னா என்பது அவரது எண்ணம். ஆனால் தமன்னா கேட்ட சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்து விட்டாராம் லிங்கு.
எதிர்பாராத ஒரு பெரும் சம்பளத்தை தமன்னா கேட்கவே அதிர்ச்சியாகி விட்டாராம் லிங்கு. அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று கூறிய அவர் பிறகுதான் அனகா என்கிற அமலா பாலை நாயகியாக்கினாராம்.
ஏற்றம் கொடுத்தவர்களை ஏறிய பிறகு கண்டு கொள்ளாமல் போவது தமிழ் சினிமாவில் சகஜம்தான் என்று கூறினாலும், லிங்குவுக்கு தமன்னா தந்த அதிர்ச்சிதான் கோலிவுட்டில் இப்போது ஹாட்டான பேச்சாம்.