தனுஷின் “அசுரன்“ வெளியாகி 2 வருஷம் ஆச்சு… கொண்டாடும் ரசிகர்கள் !
சென்னை : தனுஷின் அசுர நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் வெளியாகி 2 வருடம் நிறைவடைந்துள்ளது.
இத்திரைப்படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, டீஜே அருணாசலம், கென் கருணாஸ் என ஏராளமானோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.
தனுஷ் வெற்றிமாறன் காம்போவில் வெளியான முந்தைய படங்களைப் போல இந்தப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது.

அசுரன்
பூமணியின் வெக்கை நாவலைக் கொண்டு மக்களின் வாழ்வியலை அழகாக சொல்லி இருப்பார் வெற்றிமாறன். சாதி என்பது சமூகத்தில் துருத்திக் கொண்டிருக்கும் வகையில் , யாரும் பேசிக்கொண்டேயிருக்கும் ஒரு அம்சம் கிடையாது. ஆனால், கிராமங்களில், தெருக்களில், நமது வீடுகளில் மிகவும் இயல்பான ஒன்றிப்போன அங்கமாக சாதி வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அசுரன் சொல்லும் செய்தி.

இரட்டை வேடத்தில்
தனுஷ் இரட்டை வேடத்தில் இப்படத்தில் அசத்தி இருப்பார் இளமையான தனுஷ் துடிப்புடனும், வயதான தனுஷ் 3 குழந்தைகளுக்கு அப்பாவாக கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருப்பார். அதேபோல தனுஷின் மகனாக வரும் கென் கருணாஸ் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார்.

பாராட்டு
அதேபோல மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்து மஞ்சுவாரியர் இத்திரைப்படத்தில் 3 குழந்தைகளுக்கு தாயாக கனகச்சிதமாக நடித்து இருப்பார். மஞ்சுவாரியர் மற்றும் தனுஷ் இருவரின் நடிப்பு அனைவரும் பாராட்டினர்.

#2yearsofAsuran
தனுஷின் அசுரன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கு குவித்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, அசுரன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைதளங்களில் #2yearsofAsuran என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷ் ட்விட்டரில்
அதேபோல் நடிகர் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











