»   »  'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sona
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும், கவர்ச்சி நடிகை சோனாவும் இணைந்து தயாரித்துள்ள கனிமொழி என்ற படத்தின் ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.

முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழியின் பெயரில் இந்தப் படம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானபோதே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கனிமொழியிடம் அனுமதி வாங்கிய பிறகே படத்திற்கு அப்பெயரை சூட்டியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கனிமொழி படத்தின் ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிடவுள்ளார்.

இதை நடிகை சோனாவே செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சதீஷ் சக்கரவர்த்தி இசையில் உருவாகியுள்ள பாடல் வெளியீட்டு விழா வருகிற 22ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

இதில் முதல்வர் கலந்து கொண்டுஆடியோவை வெளியிடுகிறார். முதல் பிரதியை நடிகர் விஜய் பெற்றுக் கொள்வார்.

எங்களது அழைப்பை முதல்வர் ஏற்றுக் கொண்டது பெருமை தருகிறது. அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்றார் சோனா.

இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த சஷான் பதம்சீ என்பவர் நடித்துள்ளார். புதுமுகமான ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கியுள்ளார். இவர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவராம்.

சரி படம் எப்போது ரிலீஸ் என்று சோனாவிடம் கேட்டபோது ஆகஸ்ட் 6ம் தேதிக்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil