ஆஸ்கர் வாய்ப்பை இழந்தது 'பீப்ளி லைவ்'

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில், வெளிநாட்டு படப் பிரிவில் ஆமிர்கான் தயாரித்த பீப்ளி லைவ் திரைப்படமும் போட்டியிட அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இறுதி 9 படப் பட்டியலில் பீப்ளி லைவ் இடம் பெறவில்லை.
இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அனுப்ப உதான், ராஜ்நீதி ஆகிய திரைப்படங்களுடன் பீப்ளி லைவ் போட்டி போட்டிருந்தது. இறுதியில் பீப்ளி லைவ் வெற்றி பெற்று போட்டிக்கு அனுப்பப்பட்டது. தற்போது இறுதிப் பட்டியலுக்கு முன்னேற முடியாமல் திரும்பியுள்ளது பீப்ளி லைவ்.
பெரிய நடிகர்கள் யாரும் நடிக்காமல் எடுக்கப்பட்ட அழகான படம் பீப்ளி லைவ். இந்திய மீடியாக்களை வெளுத்து வாங்கிய படம் இது.
சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் தற்போது அவுட்சைட் தி லா, டாக் டூத், இன்சென்டிஸ் உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன.
Comments
ஆமிர்கானின் பீப்ளி லைவ் ஆஸ்கர் வாய்ப்பை இழந்தது பீப்ளி லைவ் peepli live ousted from oscar race peepli live out of oscar race


Click it and Unblock the Notifications