For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீடியாவுக்கு எதிராக ராம்கோபால் படம்

  By Staff
  |

  Ram Gopal Verma
  இந்தியாவில் பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் அதிகமாக வெறுக்கும் திரைப்பட இயக்குநர் இப்போதைக்கு ராம் கோபால் வர்மாவாகத்தான் இருக்கும். அவ்வளவு கோபத்திலிருக்கிறார்.

  தனது அடுத்தடுத்த மூன்று படங்கள் படு தோல்வியைச் சந்தித்ததில் மீடியாவின் பங்கு மிக அதிகம் என வெளிப்படையாகவே பேட்டிகள் கொடுத்தும் அறிக்கைகள் விட்டும் வருகிறார் மனிதர்.

  இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், மீடியா உலகின் இன்னொரு முகத்தை பகிரங்கப்படுத்தும் விதத்தில் அடுத்து ஒரு படம் தயாரித்து இயக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

  இதுகுறித்து தனது பிளாக்கில் (Blog) ராமு எழுதியுள்ளதை அவர் வார்த்தைகளிலேயே படியுங்கள்:

  மீடியா உலகின் நிஜமான முகத்தை நமது மக்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம் இந்த மீடியாக்கள் அறிமுகப்படுத்தும் அனைத்தையுமே நம்ப வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

  உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பிலிருந்து நழுவி பத்திரிகை-டிவி உலகம் எப்படி பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது என்பதை தெளிவாகச் சொன்னாலே போதும். பல சிக்கல்கள் இன்று தீர்ந்துவிடும் என்று நம்புகிறேன்.

  வாய்ப்புக் கிடைத்தால் போதுமென்று, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சரியாக எடைபோடமாலேயே இன்றைக்கு மீடியா நிர்வாணப்படுத்திப் பார்க்கிறது. இதோ... இப்போது எனக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, இந்த ஒட்டுமொத்த மீடியாவையும் நிர்வாணப்படுத்திப் பார்க்க!

  இவர்கள் என்மீது கோபப்பட்டாலும் கவலையில்லை. காரணம் எந்தத் தவறும் செய்யாமலேயே மீடியாவால் நான் கடுமையான கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்.

  ஒரு மனிதனின் உணர்வுகளைப் பற்றி கவலையேபடாமல், எதையும் விற்றுக் காசாக்கியே தீருவது என மீடியா முடிவு செய்த பின் நாம் என்ன செய்ய முடியும். யாராவது ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாத்துமாய் செய்திகள் போடுவது, பின்னர் அதற்கு அவர் அளிக்கும் மறுப்பையும் பெரிய செய்தியாக்குவது - இப்படித்தானே இருக்கிறது பத்திரிகையாளர்கள் போக்கு.

  இந்தப் படத்துக்கான ஸ்க்ரிப்ட் மற்றும் அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டேன். பூங்க் திரைப்படம் வெளியான கையோடு இந்தப் படத்தைப் பற்றி அறிவிக்கவுள்ளேன்.

  இந்தியில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இப்படத்தை வெளியிடப் போகிறேன் என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.

  ஏன் ஒரேயடியாக இவ்வளவு கோபம் ராமுவுக்கு?

  இவர் தயாரித்து இயக்கிய ஷோலேயின் ரீமேக் 'ஆக்' பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. ராம்கோபால் வர்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என ஒரு பத்திரிகை இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத, கடும் கோபத்துடன் சண்டைக்குப் போய்விட்டார் ராமு.

  அடுத்து வந்த சர்க்கார் ராஜ் படத்துக்கும் சுமார் என்றே விமர்சனங்கள் வந்தன. இப்போது வந்துள்ள காண்ட்ராக்ட் படத்தையும் பிளாப் என அறிவித்துவிட்டன.

  இந்த கோபத்தின் விளைவு, பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஒரு படம் எடுக்கத் தூண்டியிருக்கிறது ராமுவை.

  'பிரஸ் ஷோ' போடுவீங்களா ராமு?

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X