»   »  தனி ஒருவன், காக்கா முட்டை, பாகுபலி, காஞ்சனா 2... 2015ன் ப்ளாக்பஸ்டர்கள்!

தனி ஒருவன், காக்கா முட்டை, பாகுபலி, காஞ்சனா 2... 2015ன் ப்ளாக்பஸ்டர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒப்பீட்டளவில் கடந்த சில ஆண்டுகளைவிட 2015 தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாகத்தான் அமைந்தது. 150 தோல்விப் படங்கள் இருந்தாலும், பெரு வெற்றி, வெற்றி, சராசரி வெற்றி என்ற வகையில் கிட்டத்தட்ட 28 படங்கள் தேறியுள்ளன.

அதாவது 28 படங்களின் தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்துள்ளனர். மற்ற சில படங்களின் தயாரிப்பாளர்கள், நஷ்டத்தைத் தாண்டி மீண்டும் எழுந்து புதிய படங்களைத் தயாரித்து வருகின்றனர் நம்பிக்கையுடன்.


இந்த ஆண்டு பெரும் வெற்றியைக் குவித்த படங்கள் நான்கு. அதாவது ப்ளாக்பஸ்டர்கள்.


அவை:


1. தனி ஒருவன்

1. தனி ஒருவன்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆக்ஷன் க்ளாஸிக் என்ற பெருமையை தனி ஒருவனுக்குத் தரலாம். நான்கு ஆண்டுகள் சிரத்தையெடுத்து மோகன் ராஜா உருவாக்கிய திரைக்கதை பெரிய பலம். அடுத்து ஜெயம் ரவி, அர்விந்தசாமியின் அபார பங்களிப்பு. 2015-ன் க்ளீன் ப்ளாக்பஸ்டர் என்றால் அது தனி ஒருவன்தான்!


2. பாகுபலி

2. பாகுபலி

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டு தெரிவிக்கலாம், பாகுபலியை தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் நேரடியாக உருவாக்கியதற்கு. படத்தின் காட்சிகளை உற்றுப் பார்த்தால் தெரியும், சண்டைக் காட்சிகள் தவிர, மீதி வசனக் காட்சிகள் அனைத்துமே தமிழுக்கென்று தனியாகப் படமாக்கப்பட்டிருப்பதை. அதற்கான நல்ல பலனையும் தமிழ் ரசிகர்கள் தந்துவிட்டார்கள்.


3. காக்கா முட்டை

3. காக்கா முட்டை

ஒரு படம் எவ்வளவு பெரியது என்பதை பட்ஜெட்டை வைத்துச் சொல்லக்கூடாது... தரத்தை வைத்துதான் சொல்ல வேண்டும் என்பதை பொட்டிலறைந்த மாதிரி சொன்ன படம் காக்கா முட்டை. நாமும் உலக சினிமா ஒன்றை உருவாக்கிவிட்டோம் என காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது தமிழ் சினிமா. பொதுவாக இந்த மாதிரி படங்கள் வசூலில் சோடை போய்விடும் என்பார்கள். ஆனால் சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பல கோடிகளைக் குவித்து ப்ளாக்பஸ்டராகிவிட்டது.


4. காஞ்சனா 2

4. காஞ்சனா 2

பேய்ப் படங்களுக்கென தான் வைத்துள்ள ஃபார்முலாவை கொஞ்சமும் மாற்றாமல் ராகவா லாரன்ஸ் உருவாக்கியிருந்த படம் காஞ்சனா 2. படம் வெளியான முதல் வாரம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பார்த்து ஆடிப் போனார்கள் திரையுலகினர். 65 கோடியைக் குவித்திருந்தது காஞ்சனா பேய். இது டாப் நடிகர்களின் படங்களுக்கு இணையான வெற்றி என்று கொண்டாடியபடி மீண்டும் மீண்டும் காஞ்சனாவைப் பார்த்து ரசித்தனர்.


அந்த தெம்பில் அடுத்தடுத்து நான்கு பேய் ஸ்க்ரிப்டுகளை உருவாக்கிய லாரன்ஸ், அவற்றில் ஒன்றை படமாகவும் எடுத்து வருகிறார்.
English summary
Thani Oruvan, Bahubali, Kakka Muttai and Kanchana 2 are the big blockbusters of Tamil Cinema in 2015.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil