»   »  2015: இந்த ஆண்டின் டாப் 10 சூப்பர் ஹிட்டுகள்!

2015: இந்த ஆண்டின் டாப் 10 சூப்பர் ஹிட்டுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் பேய்களின் ராஜ்ஜியம் உச்சத்திலிருந்த ஆண்டு இந்த 2015தான். பத்து சூப்பர் ஹிட் படங்களில் நிச்சயம் நான்கு பேய்க் கதைகள்தான்.

ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று எதையும் நாமாக தீர்மானிக்க முடியாத அளவுக்கு கலவையாக அமைந்திருந்தது அவர்களின் ரசனை. வெற்றிப் பெற்ற படங்களைப் பார்த்தாலே இது பளிச்சென தெரியும்.


10. ரோமியோ ஜூலியட்

10. ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் ஒரு சைலன்ட் ஹிட் எனலாம். இத்தனைக்கும் விமர்சனங்கள் அவ்வளவு சாதகமாகக் கூட இல்லை. ஜெயம் ரவியை விட ஹன்சிகா கலக்கியிருந்தார் படத்தில். தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் தனது அடுத்த படத்திலும் ஜெயம் ரவியையே பெரும் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.


9. த்ரிஷா இல்லனா நயன்தாரா

9. த்ரிஷா இல்லனா நயன்தாரா

இந்தப் படத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் பிரஷ் ஷோ கூட போடவில்லை. அந்த அளவு படத்தின் ஏகப்பட்ட ஆபாச வசனங்கள், காட்சிகள். ஆனால் பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் வசூலைக் குவித்தது. மக்கள் விழுந்து விழுந்து இந்த ஆபாசத்தைப் பார்த்து ரசித்தார்கள். என்ன செய்வது!


8. இன்று நேற்று நாளை

8. இன்று நேற்று நாளை

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் வெற்றிப் பெற்ற முதல் சயின்ஸ் பிக்ஷன் கதை இது. கொஞ்சம் பிசகினாலும் மொத்தமாக சொதப்பிவிடக் கூடிய திரைக்கதை. ஆனால் படு கச்சிதமாக படமாக்கி ரசிக்க வைத்திருந்தனர்.


7. பாபநாசம்

7. பாபநாசம்

பெரிய பட்ஜெட், 200 நாட்கள் ஷூட்டிங் போன்ற சமாச்சாரமெல்லாம் இனி தனக்கு கைக் கொடுக்காது என்பதை உணர்ந்து சட்டென சின்ன பட்ஜெட், சிக்கனமான படப்பிடிப்பு, எடுத்து முடித்த கையோடு ரிலீஸ் என்ற ராமநாராயணன் பார்முலாவுக்கு கமல் ஹாஸன் திரும்பியது இந்தப் படத்தில்தான். இந்த உத்தி நல்ல பலனளித்தது. நல்ல லாபமும் கூட.


6. மாயா

6. மாயா

நயன்தாராவை மட்டுமே சுற்றிச் சுற்றிப் பின்னப்பட்ட இந்தப் பேய்க் கதை ஒரு ஆச்சர்ய ஹிட்டாக அமைந்தது இந்த ஆண்டு. நேர்த்தியான திரைக்கதை, திகிலடிக்கும் திருப்பங்கள் என மாயா ஒரு சீரியஸ் பேய்க்கதை. ஆனால் ரசிக்கும்படி இருந்தது.


5. நானும் ரவுடிதான்

5. நானும் ரவுடிதான்

நயன்தாரா - விஜய் சேதுபதி என்ற புதிய ஜோடி... டுபாக்கூர் ரவுடி, காது கேளாத கதாநாயகி என யாரும் எதிர்ப்பார்க்காத பாத்திரப் படைப்பு... சுவாரஸ்யமான காட்சிகள்.. இந்த ஆண்டின் இனிய வெற்றியாக அமைந்தது இந்தப் படம்.


4. ஐ

4. ஐ

இந்தப் படம் வெற்றியா தோல்வியா, லாபமா நஷ்டமா என எதையும் கடைசி வரை அதன் தயாரிப்பாளர் சொல்லவே இல்லை. ஒரு இயக்குநராக ஷங்கருக்கு இந்தப் படம் சறுக்கல்தான். அட, ஷங்கரின் மேல்மாடி காலியா என்ற கேள்வியை எழுப்பின படத்தின் பல முக்கிய காட்சிகள். ஆனால் வண்ணமயமான பாடல்கள், இசை, பரபர விளம்பரம் போன்றவை படம் ஓட உதவின.


3. டார்லிங்

3. டார்லிங்

ஒன்மோர் காமெடி பேய்ப் படம் என்றாலும், ஒன்ஸ்மோர் பார்க்க வைத்த படம் டார்லிங். கருணாஸ், பாலசரவணனின் நடிப்பு படத்துக்கு பெரும் பலம். பத்து கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதைவிட நான்கு மடங்கு அதிக லாபம் சம்பாதித்துக் கொடுத்தது டார்லிங். ஜிவி பிரகாஷை முன்னணி ஹீரோவாகவும் ஆக்கிவிட்டது.


2. கொம்பன்

2. கொம்பன்

குட்டிப் புலிக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் வந்த படம் கொம்பன். சாதிச் சர்ச்சைகளில் சிக்கி கடைசி வரை வருமா வராதா என்று பரபரப்புக் கிளப்பி, வெளியான பிறகு நல்ல படம்யா என்று சொல்ல வைத்தது இந்த கொம்பன். கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் ஆகிய மூவருமே வாழ்ந்திருந்தார்கள், அந்தந்தப் பாத்திரங்களாய். படத்தின் வெற்றிக்கு இந்த நேர்த்தியான நடிகர்களும் முக்கிய காரணம்!


1. வேதாளம்

1. வேதாளம்

அஜீத் - ஸ்ருதி - லட்சுமி மேனன் நடித்த இந்த வேதாளம் அண்ணன் - தங்கை சென்டிமென்டை வைத்து உருவானது. சுமாரான திரைக்கதை, எதிர்ப்பார்த்த மாதிரி காட்சிகள் என எல்லா மைனஸ்கள் இருந்தாலும், தீபாவளி ரேசில் படம் ஜெயித்துவிட்டது. ரூ 80 கோடி வரை வசூல் என்கிறார்கள்.


English summary
Here is the list of Top 10 superhit movies of Tamil Cinema in 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil