twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குசேலனுக்கு எதிராக சதியாம்!-சொல்கிறார் புஷ்பா கந்தசாமி

    By Staff
    |

    Nayantara,Vasu and Pushbha
    ரஜினி நடித்துள்ள குசேலன் திரைப்படத்தை இப்போதைக்கு எந்தத் திரையரங்கை விட்டும் தூக்கவும் இல்லை, புதிதாக எந்தக் காட்சியையும் சேர்க்கவும் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான புஷ்பா கந்தாசாமி தெரிவித்துள்ளார்.

    குசேலன் படத்தில் ரஜினிக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் அவரது காட்சிகள் அதிகமாக வருவதுபோல படத்தை மாற்ற வேண்டும் என்று பல மாவட்டங்களிலிருந்தும் கடிதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன, இயக்குநர் வாசுவுக்கும், ரஜினியின் தலைமை மன்றத்துக்கும்.

    அரசியல் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிய வந்ததால், அக்காட்சிகளை நீக்கிவிடுமாறு ரஜினி கூறினார். அதைத் தொடர்ந்து அக்காட்சிகள் நீக்கப்பட்டன.

    இந்நிலையில் குசேலன் திரைப்படத்துக்கு கூட்டம் குறைவாக உள்ளதால் திரையரங்குகளிலிருந்து அந்தப் படத்தை தூக்கிவிட்டு, புதிய காட்சிகளைச் சேர்த்து மீண்டும் வெளியிடப் போவதாக செய்தி வெளியானது.

    ஆனால், இதை பிரமிட் சாய்மிரா நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியும், இயக்குநர் வாசுவும் இந்த தகவல்களை மறுத்துள்ளனர்.

    இதுகுறித்து புஷ்பா கந்தசாமி கூறியதாவது:

    குசேலன் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் போது. ரிலீசாகி 20 நாட்களுக்குள் ஒரு படத்தின் வியாபாரத்தை எப்படிக் கணிக்க முடியும். இது திட்டமிட்ட சதி.

    குசேலன் துவக்க விழாவிலேயே, தன்னுடைய பங்கு 25 சதவிகிதம், வடிவேலு 25 சதவிகிதம் மற்றும் பசுபதி 50 சதவிகிதம் என்று தெளிவாகக் கூறிவிட்டார் ரஜினி சார். இதை எந்த இடத்திலும் நாங்கள் மறுக்கவில்லை.

    எந்த உண்மையையும் நாங்கள் மறைத்து இந்தப் படத்தை விற்கவில்லை. படத்தை வாங்க பிரமிட் சாய்மிரா எங்களுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக இப்படத்தைப் பார்த்தார்கள். அவர்கள் முழுமையாக திருப்தியடைந்த பிறகுதான் வியாபாரம் பேசி முடித்தார்கள்.

    ரிலீசுக்கு ஒரு வாரம் முன்புகூட படம் பார்த்த பிரமிட் சாய்மிரா உரிமையாளர்கள், படம் அருமையாக உள்ளது என்று கூறி உலகெங்கும் தாங்களே வெளியிடுகிறோம் என்றனர். உண்மை இப்படியிருக்கும்போது, எங்கள் மீது பழிபோடுவது என்ன நியாயம்?

    இந்தப் படத்தை குறைவான திரையரங்குகளில் வெளியிட வேண்டும், கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். இப்படித்தான் ரஜினி சாரும் சொன்னார். அப்படிச் செய்யாததுதான் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் செய்துவிட்டது.

    அதுமட்டுமல்ல... இது குடும்பப் படம். பெண்களுக்குப் பிடித்த கதை. அவர்கள் ரசித்துப் பார்ப்பார்கள். ஆனால் அதுவரை அமைதியாக இருக்க வேண்டும். படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, அதற்கு எதிர்மறையான விளம்பரங்களைக் கிளப்புவது வேதனையாக இருக்கிறது. இப்போதும் விளம்பரங்களை நல்ல மாதிரியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும், வரவேற்பு நிச்சயம் தொடரும்.

    ரசிகர்கள் மட்டுமல்ல, குடும்பம் குடும்பமாக பார்க்கத் தொடங்குவார்கள். அதற்கான அவகாசத்தைக் கூடத் தராமல் தேவையற்ற சர்ச்சைகளை சிலர் கிளப்பி விடுவதை இப்போது மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

    இது ஒரு நல்ல கதை. அந்த கதையின் மீது கொண்ட நம்பிக்கையால்தான் ரஜினி இந்தப் படத்தில் நடித்தார். அதே நம்பிக்கையில்தான் இப்போது ஷாரூக்கான் சொந்தமாக தயாரித்து நடிக்கிறார் இப்படத்தில்.

    தெரியாத கதையைப் படமாக்கியிருந்தால், இன்று இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயமிருக்கும். ஆனால் இது எல்லாருக்கும் தெரிந்த கதை. படம் இப்படித்தான் இருக்கும் எனத் தெரிந்தே வாங்கினார்கள், திரையிட்டார்கள். இப்போது வந்து குறை சொல்கிறார்கள். இதே படம் மற்ற இடங்களில் நன்றாகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறது...என்றார் புஷ்பா கந்தசாமி.

    வாசு மறுப்பு:

    ரஜினி தொடர்பாக புதிய காட்சிகள் எதையும் சேர்ப்பது குறித்த திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் இப்படிப்பட்ட யூகச் செய்திகள்தான் படத்துக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்திவிட்டதாகவும் இயக்குநர் வாசு தெரிவித்தார்.

    மொத்தத்தில் குசேலன் பாடு படு திண்டாட்டமாக உள்ளது மட்டும் உண்மை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X