twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்னத்துக்கு கேரளா நிபந்தனை!

    By Staff
    |

    Manirathnam with Suhasini
    ராவணா படத்தின் ஷூட்டிங்கை மலையத்தூர் வனப்பகுதியில் நடத்த கேரள அரசு இயக்குநர் மணிரத்தினத்திற்கு பல புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதற்கு அவரும் கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ், இந்தியில் உருவாகும் படம் ராவணா. அபிஷேக் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மலையத்தூர் வனப்பகுதியில் நடந்து வந்தது.

    ஆனால் வனப்பகுதியை சீரழித்து விட்டதாக கூறி படப்பிடிப்புக்கு கேரள அரசின் வனத்துறை தடை விதித்தது. மேலும் மணிரத்தினத்தின் படக்குழுவினர் மீது வழக்கும் பதிவு செய்தது.

    இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கேரள அரசுக்கு மணிரத்தினம் கோரிக்கை வைத்தார். இதைப் பரிசீலித்த கேரள அரசு தற்போது சில புதிய நிபந்தனைகளுடன் படப்பிடிப்பைத் தொடரலாம் என அனுமதித்துள்ளது.

    மணிக்கு கேரள அரசு போட்டுள்ள நிபந்தனைகள்

    - காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஷூட்டிங் நடத்தலாம்.

    - தினசரி வாடகை ரூ. 10 ஆயிரம் ஆகும் (முன்பு ரூ. 1000 மட்டுமே வசூலித்தனர்)

    - படப்பிடிப்பின்போது 150 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

    - வனப் பகுதிக்குள் 15 வாகனங்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படும்.

    - பெரிய பெரிய செட்களை போடக் கூடாது.

    - குழாய் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. கண்டிப்பாக டைனமைட், டெட்டனேட்டர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

    - காட்டுக்குள் உள்ள விலங்குகளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரக் கூடாது.

    இவைதான் மணிரத்தினத்திற்குப் போடப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள். இவற்றை ஏற்றுக் கொள்வதாக மணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டதாம்.

    முன்பு படப்பிடிப்பு தொடங்கியபோது காட்டுக்குள் ஏகப்பட்ட குடில்களை அமைத்த படப்பிடிப்புக் குழுவினர், ஏராளமான மரங்களையும் வெட்டியதால் வனத்துறை ஆத்திரமடைந்தது. மேலும் 300க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் அந்த இடமே சீரழிந்து போய் விட்டதாகவும் வனத்துறை குற்றம் சாட்டியது என்பது நினைவிருக்கலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X