twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓடத் தொடங்கியது 'ரசிகன் எக்ஸ்பிரஸ்'

    By Staff
    |

    Reliance Mobile Vijay Awards RASIGAN EXPRESS Journey begins
    ரிலையன்ஸ் மொபைல் விஜய் விருதுகள் நிகழ்ச்சி, களை கட்டத் தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    விஜய் டிவி கடந்த ஆண்டு நடத்திய ரிலையன்ஸ் மொபைல் விஜய் விருதுகள் பெரும் வெற்றி பெற்றது. முக்கிய விருதுகளை ரசிகர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் வகையில் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தை தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி, ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பை இதன் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவி.

    இந்த ஆண்டும் ரசிகன் எக்ஸ்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. மார்ச் 20ம் தேதி சென்னை சிட்டி சென்டரில் நடந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில், மாநில செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி விஜயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ரசிகன் எக்ஸ்பிரஸ் வேன், மார்ச் 21ம் தேதி சேலம், 22ம் தேதி ஈரோடு, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கோவை, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுரை, 27ம் தேதி திருச்சி, 28ம் தேதி தஞ்சாவூர், 29ம் தேதி விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும்.

    விருதுக்குரியவர்களை ரசிகர்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுக்கலாம். 2007ம் ஆண்டில் வெளியான 107 படங்கள் போட்டியில் கலந்து கொள்கின்றன. மொத்தம் 30 வகையான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய 4 விருதுகளை ரசிகர்களே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கவுள்ளனர். இதற்காகத்தான் ரசிகன் எக்ஸ்பிரஸ் பயணம் மேற்கொண்டுள்ளது. மற்ற 26 விருதுகளையும் நடுவர் குழு தேர்வு செய்யும்.

    இதுதவிர எஸ்.எம்.எஸ், இன்டர்நெட் மூலமாகவும் ரசிகர்கள் ஓட்டளித்து தங்களுப் பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்குநரைத் தேர்வு செய்யலாம்.

    விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் நடிகர் பாக்யராஜ், நடிகர்-இயக்குநர்-கதாசிரியர் யூகி சேது, கார்ட்டூன் கலைஞர் மதன், இயக்குநர் பிரியதர்ஷனின் மனைவியும், முன்னாள் நடிகையுமான லிஸி பிரியதர்ஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ரிலையன்ஸ் மொபைல் விஜய் விருதுகள் குறித்த நிகழ்ச்சி மார்ச் 30ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பிற்பகல் 2 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். ஆரம்ப நிகழ்ச்சிகளை நீயா நானா புகழ் கோபிநாத் தொகுத்து வழங்குவார்.

    மேலும் விவரங்களுக்கு http://www.vijayawards.in/ என்ற இணையத் தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X