twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட் படத்துக்கு கேன்ஸில் பார்ட்டி

    By Staff
    |

    Nandana Sen with Randeep Hood
    ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் உருவாகியுள்ள 'ரங் ரசியா' படத்தின் புரமோஷனுக்காக, கேன்ஸ் நரில் கடற்கரையோரம் உள்ள ரிசார்ட்டில் பிரமாண்ட விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பிரபல இயக்குநர் கேத்தன் மேத்தா இயக்கியுள்ள படம் ரங் ரசியா. ரந்தீப் ஹூடா, நந்தனா சென், பெரேனா வாசியர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை மாயா மூவிஸ் தயாரித்துள்ளது.

    இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளது. இப்படத்தை கேன்ஸ் பட விழாவில் பிரபலப்படுத்துவதற்காக கேன்ஸ் நகரில், கடற்கரையோ ரிசார்ட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    மாயா மூவிஸ் மற்றும் ஆனந்த் மஹேந்த்ரூவின் இன்பினிட்டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    கேத்தன் மேத்தா உள்ளிட்ட படக் குழுவினர் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது ரங் ரசியா படத்திலிருந்து சில காட்சிகள் போட்டுக் காட்டப்பட்டன. ராஜஸ்தான் நாட்டுப்புறக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

    ரங் ரசியா, ஆங்கிலத்தில் கலர்ஸ் ஆப் பேசன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது படைப்புகள் குறித்த படம் இது.

    நிகழ்ச்சியில் பேசிய கேத்தன் மேத்தா, ராஜா ரவி வர்மா அக்காலத்திலேயே கடவுள் படங்களை வித்தியாசமாக வரைந்தவர். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கும் ஆளானார். தண்டிக்கவும் பட்டவர் வர்மா.

    கருத்துச் சுதந்திரத்திற்கு அன்று ஏற்பட்ட தடை, முட்டுக்கட்டை, எதிர்ப்பு இன்றும் நிலவுகிறது. எம்.எப். ஹூசேனால் இன்று சுதந்திரமாக படம் வரைய முடியவில்லை. இந்தியாவில் வசிக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அதேபோன்ற நிலையில்தான் சல்மான் ருஷ்டியும் இருக்கிறார். இது கருத்து சுதந்திரத்தை மதிக்கும் படைப்பாளிகளுக்கு கவலை தரும் விஷயமாகும் என்றார்.

    விரைவில் ரங் ரசியா இந்தியாவில் திரையிடப்படவுள்ளதாகவும் கேத்தன் மேத்தா தெரிவித்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X