»   »  வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை, ஆடுகளம் படங்களுக்கு ரொக்கப் பரிசு!

வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை, ஆடுகளம் படங்களுக்கு ரொக்கப் பரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vaagai Sooda Vaa and Azhagarsamiyin Kudhirai
சென்னையில் நடந்த சர்வதேச படவிழாவில் வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை மற்றும் ஆடுகளம் படங்களுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

9-வது சர்வதேச படவிழா சென்னையில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 154 படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் படங்களுக்கான பிரிவில் 16 படங்கள் பங்கேற்றன.

இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நேற்று மாலை 6நடந்தது. அதில், தமிழ் படங்களுக்கு போட்டி பிரிவில் முதல் பரிசுக்குரிய படமாக 'ஆடுகளம்' தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு ரூ.2 லட்சமும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.

இந்த பரிசுத்தொகையை இருவருக்கும் இயக்குநர் கே.பாலசந்தர் வழங்கினார்.

2-வது பரிசு பெறும் படமாக 'வாகை சூடவா' தேர்ந்தெடுக்கப்பட்டது. மிக உயர்ந்த லட்சியத்தை, வெகு யதார்த்தமாகவும் அழகியலோடும் சொன்ன படம் இது. அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.முருகானந்தத்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் சற்குணத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகையை தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் வழங்கினார்.

நடுவர்களின் விசேஷ பரிசுக்குரிய படமாக 'அழகர்சாமியின் குதிரை' தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த படத்தின் கதை-வசன கர்த்தா பாஸ்கர் சக்திக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. பரிசுத்தொகையை தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் வழங்கினார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டார்.

English summary
Tamil films Vaagai Soodava, Azhagarsamiyin Kudhirai and Aadukalam won cash prizes in Chennai Film Festival.
Please Wait while comments are loading...