twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் கடவுள்: 16 கோடிக்கு வாங்கிய ஜீ!

    By Staff
    |

    Arya in Naan Kadavul
    தமிழ் திரைப்படத் தயாரிப்பு மற்றும் வினிநியோக‌த் துறை‌யி‌ல் ச‌ன் டிவிக்கு இணையாக இப்போது வட இந்திய தனியார் டிவி நெட்வொர்க்கான ஜீ டிவியும் (Zee TV) இறங்கியுள்ளது.

    முதல் கட்டமாக, இயக்குனர் பாலாவின் இரண்டாண்டு கால தயாரிப்பான நான் கடவுள் படத்தை வாங்கியுள்ளது ஜீ.

    ஜீ டிவி விரைவில் தனது தமிழ் ஒளிபரப்பைத் துவங்கவுள்ளது. தமிழில் சேனல் துவங்க வேண்டுமானால் அதற்கு இன்றியமையாத ஒன்று தமிழ் சினிமா ஒளிபரப்பு உரிமை பெறுவது.

    பெரும்பாலும் புதிய தமிழ்ப் படங்களின் உரிமையை சன் மற்றும் கலைஞர் டிவி மட்டுமே வைத்துள்ளன. வெகு சில படங்களை ஜெயா டிவி வாங்குகிறது.

    இந் நிலையில் இந்த மூன்று டிவிக்களுக்கும் போட்டியாக ஜீயும் களத்தில் குதித்துள்ளது. ஆரம்பத்தில் சின்னச்சின்ன திரைப்படங்களை வாங்கிய ஜீ, இப்போது பாலாவின் எதிர்பார்ப்புக்குரிய நான் கடவுள் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கியுள்ளது.

    இந்தப் படம் முதலில் பிஎல் தேனப்பன் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டது. பட்ஜெட் தொகை எகிறியதால் தயாரிப்பிலிருந்து தேனப்பன் விலகிக்கொள்ள பிரமிட் சாய்மிரா நிறுவனம் அதை ஏழரை கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது.

    ஆனால் அவர்களுக்கும் பிரச்சினை தொடர்ந்தது. முதல் பிரதி அடிப்படையில் பாலாவே படத்தை எடுத்து வந்ததால், படம் முடியும்போது தயாரிப்புச் செலவு இரு மடங்காகிவிட்டது.

    'கைக்காசை செலழித்துப் படமெடுத்திருக்கிறேன். எனவே 14 கோடி கொடுக்க வேண்டும்' என இயக்குநர் பாலா கறாராகக் கூறிவிட்டார். பிரமிட் சாய்மிரா அவ்வளவு பெரிய தொகை கொடுக்கத் தயங்கியது. பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போனது.

    இந்நிலையில்தான் ஜீ நிறுவனம் இந்தப் படத்தை 16 கோடிக்கு மொத்தமாக வாங்கிக் கொண்டுள்ளது. தீபாவளிக்குப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

    மேலும், இதே நிறுவனத்துக்காக பாலா ஒரு புதிய படத்தை உருவாக்கித் தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூபறப்படுகிறது.

    பாலா தவிர மேலும் 3 இயக்குநர்களிடமும் புதிய படத் தயாரிப்புக்கு பேசி வருகிறது ஜீ நிறுவனம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X