Just In
- 33 min ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 39 min ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 54 min ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 2 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
கலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முருங்கைக் காய் வெட்ட ட்ரெயினிங் கேட்ட பாக்யராஜ்!

ஆனால் சமீபத்தில் முருங்கைக்காய் வெட்ட அவர் தனி ட்ரெயினிங் எடுத்தார் என்றால்... சுவாரஸ்யமான சமாச்சாரமாகத் தெரிகிறதல்லவா...?
விஷயம் வேறொன்றுமில்லை...
பாக்யராஜும் அவர் மனைவி பூர்ணிமாவும் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கிறார்கள். இதயம் மந்த்ரா கடலை எண்ணெய் விளம்பரம் அது. லேகா ரத்னகுமார் இயக்குகிறார். இந்த விளம்பரத்துக்கு வேறு யாரையும் விட பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதிகள் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதிய லேகா, பாக்யராஜிடம் பேச, உடனே ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளனர்.
இதயம் மந்திரா கடலை எண்ணெயில் சமைப்பதன் நன்மைகளைச் சொல்லும் விளம்பரம் அது. சமைப்பது போல, குறிப்பாக முருங்கைக்காயை வெட்டிச் சமைப்பது போன்ற காட்சிகளை படமாக்க விரும்பினாராம் லேகா.
இதுபற்றி பாக்யராஜிடம் விளக்கியதும், 'இந்த காட்சியில் நடிக்கும் முன் நான் முருங்கைக்காயை வெட்ட முழுமையாக ட்ரெயினிங் எடுத்துக் கொள்கிறேன்' என்று கேட்டாராம். உடனே, நிகழ்ச்சியின் தலைமை சமையல் நிபுணரிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்தான் முருங்கைக்காய் வெட்ட பாக்யராஜுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.
எத்தனையோ விளம்பர, சினிமா வாய்ப்புகள் வந்தும் ஒப்புக்கொள்ளாத பூர்ணிமா பாக்யராஜ், 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்த விளம்பரத்துக்காக கேமரா முன் நின்றுள்ளார்.
பாக்யராஜை இயக்கிய அனுபவம் பற்றி லேகா ரத்னகுமார் கூறுகையில், "விளம்பரப் படம்தான் என்றாலும், அதில் நடித்தபோது பாக்யராஜும் பூர்ணிமாவும் காட்டிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மறக்கமுடியாதது. பாக்யராஜ் ஆச்சே... அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற தயக்கத்துடன் நான் கூறிய சில விஷயங்களை அவர் எடுத்துக் கொண்ட விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
முதல்நாள் படப்பிடிப்பின் போது, காலை 7 மணிக்கெல்லாம் தயாராக வந்துவிட்டனர் இருவரும். ஆனால் பகல் 1 மணிக்குத்தான் படப்பிடிப்பைத் தொடங்க முடிந்தது. ஆனால் அதற்காக இருவருமே கோபித்துக் கொள்ளவில்லை.
நான் தனியாக இதுபற்றி பாக்யராஜிடம் விளக்க முற்பட்ட போது, 'இதெல்லாம் சகஜம்தான். பரவாயில்லை விடுங்கள்...' என்று கூறினார். அடுத்த நாளும் வந்து நடித்துக் கொடுத்தார்... 25 ஆண்டுகளுக்கு முன் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் பார்த்து, அந்த பாதிப்பில் நான் உருவாக்கியதுதான் 'இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்' என்ற புகழ்பெற்ற விளம்பரப் படம். இப்போது அதே பாக்யராஜை வைத்து விளம்பரப் படம் எடுப்பது ஒரு இனிய அனுபவம்தான்," என்றார்.
இந்த விளம்பரப் படம் முடிந்த கையோடு, அமெரிக்காவுக்குப் புறப்பட்டு விட்டார் லேகா ரத்னகுமார். இதே இதயம் மந்த்ரா கடலை எண்ணெய்க்காக ஹாலிவுட்டில் இன்னொரு விளம்பரப் படம் எடுக்கத்தான் இந்தப் பயணமாம்!