twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு

    By Shankar
    |

    'சர்வதேச அளவிலான திரைப்பட வர்த்தகத்தை நம் வசப்படுத்த தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகம் இணைந்து செயல்பட வேண்டும்', என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

    சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா - காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற படம் மகதீரா. ராஜா மவுலி என்ற புதிய இயக்குநர் இயக்கிய இந்தப் படம் தெலுங்கில் வசூல் சாதனைப் படைத்தது.

    இப்போது அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் தமிழில் ரிலீஸாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தை ஒரிஜினல் தமிழ்ப் படத்துக்கு நிகராக பிரமாண்டமாய் வெளியிடுகிறது.

    இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாறு பார்க் ஷெராட்டனில் நடந்தது. நடிகர் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தட்டை வெளியிட்டார். இயக்குநர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் நாயகன் ராம் சரண் தேஜா உள்ளிட்டோர் அதைப் பெற்றுக் கொண்டனர்.

    முன்னதாக, கமல் பேசுகையில், "இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் காட்சிகள், பாடல்களைப் பார்க்கும்போதே இதில் எந்த அளவு உழைப்பு இருக்கிறது என புரிகிறது. இதுபோன்ற தெலுங்குப் படங்கள் நிறைய தமிழுக்கு வரவேண்டும். அதேபோல தமிழ்ப் படங்களும் தெலுங்கில் வெளியாகின்றன. எனக்குத் தெரியும், எத்தனையோ தெலுங்கு மக்கள் தமிழையை தங்கள் தாய்மொழியாக சுவீகரித்துக் கொண்டு இங்கே உள்ளனர் என்று.

    இந்தியாவில் சினிமா தயாரிப்பது என்றால் மும்பைதான் என்ற ஒரு கருத்து வெளிநாடுகளில் உள்ளது. இருக்கலாம் அது தவறில்லை. ஆனால் அதற்கு இணையாக ஆந்திரா, தமிழ்நாட்டிலும் படங்கள் தயாராவதை நாம் காட்ட வேண்டியது, சர்வதேச சினிமா வர்த்தகத்தை கைவசப்படுத்த உதவும். அதற்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவும் இணைந்தால் அது எவ்வளவு பெரிய சக்தி என்பதை உலக சினிமா சீக்கிரம் புரிந்து கொள்ளும். அதற்கான முயற்சிகளில்தான் எங்களைப் போன்றவர்கள் உள்ளனர்..," என்றார்.

    விழாவில் சிரஞ்சீவியும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் புட்டபர்த்தி சென்றுவிட்டதால், அவர் இல்லாமலேயே விழா நடந்தது.

    English summary
    Legendary actor Kamal Hassan launched the audio of Ram Charan Teja's Maaveeran, the dubbed Tamil version of Telugu block buster Magadheera on Sunday evening. In his key address, the actor emphasized for a joint functioning of Tamil and Telugu cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X