twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்.. முழுசா ரீமேக்வுட்டாக மாறிய பாலிவுட்டை பார்.. இந்த 25 தென்னிந்திய மொழி படங்கள் ரீமேக் ஆகுது!

    |

    சென்னை: ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 வெற்றியை பார்த்து ஒட்டுமொத்த பாலிவுட்டையே பாலிவுட் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், இப்படியொரு விஷயம் மேலும், ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

    ஒட்டுமொத்தமாக 25 தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகிறதாம். இந்த படங்கள் ஓடினால், கூட அதன் கிரெடிட்ஸ் தென்னிந்திய சினிமாவைத்தானே சென்று சேரும் என விளாசித் தள்ளி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் எத்தனை படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகிறது என்பதை இங்கே காண்போம்..

    ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள்...அருண் பாண்டியனுக்கு அமீர் பதிலடிஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள்...அருண் பாண்டியனுக்கு அமீர் பதிலடி

    வாத்துக் கூட்டம்

    வாத்துக் கூட்டம்

    சினிமா என்பதே கற்பனைத் திறன் நிறைந்த ஒரு கனவுத் தொழிற்சாலை தான். ஆனால், தற்போது காசு உருவாக்கும் எந்திரமாகவே பார்க்கப்படுவதால், வாத்துக் கூட்டம் போல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முன்னணி நடிகர்களும் மாறி விட்டனர் என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். ஸ்போர்ட்ஸ் படங்கள் வந்தால் வரிசையாக ஸ்போர்ஸ்ட் படங்கள் எடுப்பது. பேய் படம் வந்தால் பேய் படங்களாக எடுத்து வெறுப்பேற்றுவது போல பாலிவுட் ரசிகர்களை தற்போது அங்குள்ள படைப்பாளிகள் ரீமேக் படங்களாக எடுத்து காண்டாக்கி வருகின்றனர்.

    ரீமேக்வுட்

    ரீமேக்வுட்

    ரீமேக் படங்கள் என்பது தவறான விஷயம் என்று சொல்ல முடியாது. உலகம் முழுவதும் இதுவொரு நடைமுறையாகவே உள்ளது. பிறமொழியில் வரும் நல்ல படங்களை நம் மொழியில் நமது ரசிகர்களுக்காக எடுத்துக் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், ஒட்டுமொத்த பாலிவுட்டே ரீமேக்வுட்டாக மாறி இருப்பது தான் இந்தி ரசிகர்களை இம்சைக்கு ஆளாக்கி இருக்கிறது.

    25 தென்னிந்திய படங்கள்

    25 தென்னிந்திய படங்கள்

    ஒட்டுமொத்தமாக 25 தென்னிந்திய படங்களை பாலிவுட் தற்போது ரீமேக் செய்து வருவதுதான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஏதோ ஒன்றிரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை. இத்தனை படங்களை ரீமேக் செய்து பாலிவுட் ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடியும் என எப்படி யோசித்தனர் என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது. பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கும் இதை முன்வைத்தே தனது ஆதங்கத்தை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

    12 தமிழ் படங்கள்

    12 தமிழ் படங்கள்

    சூரரைப் போற்று, அந்நியன், கைதி, விக்ரம் வேதா, மாஸ்டர், கோமாளி, மாநகரம், ராட்சசன், துருவங்கள் பதினாறு, தடம், அருவி மற்றும் கோலமாவு கோகிலா என ஒட்டுமொத்தமாக 12 தமிழ் படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன. சமீபத்தில் ஜிகர்தண்டா படம் பச்சன் பாண்டேவாக வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    7 மலையாள படங்கள்

    7 மலையாள படங்கள்

    த்ரிஷ்யம் 2, அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசன்ஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன், ஹெலன், ஃபாரன்சிக் மற்றும் ஹிரிதயம் என 7 மலையாள திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன. இதில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் த்ரிஷ்யம் 2 மற்றும் அய்யப்பனும் கோஷியும் இந்தி ரீமேக்கிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தெலுங்கு மற்றும் கன்னடா

    தெலுங்கு மற்றும் கன்னடா

    ஏவிபிஎல், ஹிட்: தி ஃபர்ஸ்ட் கேஸ், நாந்தி, சத்ரபதி மற்றும் F2 உள்ளிட்ட தெலுங்கு படங்களும், கன்னட படமான யு டர்ன் படமும் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. சமீபத்தில் வெளியான ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் கன்னட படமான கேஜிஎஃப் 2 படங்களும் இந்தியில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை ஆடியது. நானியின் தெலுங்கு படமான ஜெர்ஸி இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்துள்ளது.

    English summary
    25 South Indian Films getting remade in Bollywood, Here is the Full Shocking List. Hindi fans totally upset on Hindi Film makers remake decision.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X