twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ருதி படம் கைவிடப்பட்டது

    By Staff
    |

    Surthi Hasan
    கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்-மாதவன் இணைந்து நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டது.

    கமல்ஹாசனின் இளைய மகள் ஸ்ருதி. படு அழகாக காணப்படும் ஸ்ருதி, இசையில் நிபுணத்துவம் பெற்று வருகிறார். இசை ஆல்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ள ஸ்ருதி நடிக்கவும் தீர்மானித்தார். தன்னைத் தேடி வந்த பல வாய்ப்புகளை நிராகரித்த அவர் மாதவனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மட்டும் ஏற்றார்.

    படப்பிடிப்புக்காக அவர் தீவிரமாக தயாராகி வந்தார். தனது உடல் எடையையும் குறைத்து படு ஸ்லிம்மானார். தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அவர் கண்ணைக் கவரும் வகையில் வந்திருந்து அனைவரையும் கவர்ந்தார்.

    இந்த நிலையில் ஸ்ருதி - மாதவன் நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டு விட்டது. இதை மாதவனே உறுதிப்படுத்தியுள்ளார். தவிர்க்க முடியாத காரணத்தாலும், கிரியேட்டிவ் சைடில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும் படம் கைவிடப்பட்டு விட்டதாக மாதவன் தெரிவித்துள்ேளார்.

    படம் கைவிடப்பட்டது குறித்து மாதவன் கூறுகையில், படம் டிராப் ஆனதற்கான காரணங்களை முழுமையாக சொல்லும் நிலையில் நான் இல்லை. படம் இல்லை, அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் மாதவன்.

    இருப்பினும் இப்படத்தின் தயாரிப்பாளருக்காக இன்னொரு படம் செய்யவுள்ளார் மாதவன்.

    ஸ்ருதி படம் கைவிடப்பட்டாலும் கூட மாதவனுக்கு இந்தியில் இரு பெரிய படங்கள் புக் ஆகியுள்ளன. ஒன்றில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இன்னொன்றில் அமீர்கானுடன் இணைகிறார். இதில் கரீனா கபூரும் இருக்கிறார். படத்திற்கு 3 இடியட்ஸ் என்று பெயராம். நடிப்பில் சத்தாய்க்கும் அளவுக்கு செமத்தியான கேரக்டராம் மாதவனுக்கு. சந்தோஷமாக உள்ளார்.

    சரி, ஸ்ருதி படம் கைவிடப்பட்டது ஏன் என்று கோலிவுட்டில் விசாரித்தபோது, ஹீரோ மாதவனுக்குப் பதில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற இளம் நாயகர்கள் யாராவது இருந்தால் நல்லது என்று ஸ்ருதி தயாரிப்பாளரிடம் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். இதுதான் படம் கைவிடப்பட காரணம் என்கிறார்கள்.

    உண்மை என்னவோ?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X