»   »  'நாளைய தீர்ப்பு' டு 'மெர்சல்' நாயகன்... கால் நூற்றாண்டைக் கடந்த விஜய்! #Vijay25

'நாளைய தீர்ப்பு' டு 'மெர்சல்' நாயகன்... கால் நூற்றாண்டைக் கடந்த விஜய்! #Vijay25

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 1992-ம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் இன்று 25 வருடங்களை நிறைவு செய்கிறார்.

ரசிகர்களின் விருப்பத்திற்கேற்பவும், ட்ரெண்டுக்கு தகுந்தபடியும் ஸ்டைல், நடிப்பு என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு இப்போதும் இளமையாக நடித்து வரும் விஜய் ஹீரோவாக கால் நூற்றாண்டைக் கடந்திருக்கிறார்.

ஹீரோவாக விஜய்யின் சினிமா பயணத்தில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அப்பாவால் அறிமுகம்

அப்பாவால் அறிமுகம்

10 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமான விஜய், தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார். கல்லூரியில் படிக்கும்போது சினிமா ஆர்வம் அதிகமாக, படிப்பை பாதியில் கைவிட்டு சினிமாவில் நடிக்கும் முடிவை எடுத்தார். அதற்கு முதலில் எதிர்ப்புகள் இருந்தாலும், அப்பா எஸ்.ஏ.சி-யே ஏற்றுக்கொண்டார்.

நாளைய தீர்ப்பு

நாளைய தீர்ப்பு

1992-ல் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' படம் தான் நாயகனாக விஜய்யை அறிமுகம் செய்த படம். அதன் பிறகும், வேறு யாரும் விஜய்யை வைத்துப் படம் எடுக்க முன்வரவில்லை. சில வருடங்களுக்கு, அப்பாவால் வளர்ந்து வருபவர் என்கிற பேச்சுகளையே தொடர்ந்து அவரால் கேட்க முடிந்தது.

தனக்கான வெற்றி

தனக்கான வெற்றி

தனது அப்பாவால் முன்னுக்கு வந்தவர் என்கிற பேச்சுகள் அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. அதைத் தவிர்க்க விஜய்க்கு இன்னும் பலமான ஒரு வெற்றி தேவைப்பட்டது. அதுவும் வேறு இயக்குநர் படத்தில் நடித்து அந்த வெற்றியைப் பெற வேண்டும் என நினைத்தார். அதைக் கடக்க அவருக்குத் துணைபுரிந்த படம் 'பூவே உனக்காக'. விக்ரமன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

ஸ்டைல்

ஸ்டைல்

தொடர் வெற்றிப் படங்களின் மூலம் சினிமாவில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட விஜய், காலத்திற்குத் தகுந்தாற்போல ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஃபேமிலி சப்ஜெக்ட் படங்களின் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸை கவர் செய்திருந்த விஜய் மாஸ் படங்களின் மூலம் புதிய ரசிகர்களைப் பெற்றார்.

சேஞ்ச் ஓவர்

சேஞ்ச் ஓவர்

தன்னோடு நடிக்கவந்த நடிகர்கள் சிலர் சோடைபோனபோது, அதில் தானும் சிக்காமல் இருப்பதற்கான வழிகளை அறிந்து செயல்படத் தொடங்கினார். தனது கெட்டப்பையும், ஸ்டைலையும் மாற்றி 'திருமலை' படத்தில் செம என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து வெளிவந்த 'கில்லி', 'திருப்பாச்சி' படங்கள் மெஹா ஹிட் ஆகி கைகொடுத்தன.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

அவ்வப்போது ஸ்டைலை மாற்றி தன்னை எப்போதும் அப்டேட்டாகவே வைத்துக்கொண்டார் விஜய். அதனால்தான், அவர் வயதைத் தாண்டிய ரசிகர்களையும், 90-களில் பிறந்த ரசிகர்களையும், மில்லியனியம் ஆண்டின் ரசிகர்களையும் ஒரே காலகட்டத்தில் பெற்றிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களின் மூலம் சூப்பர் ஹீரோவாக ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறார் விஜய்.

வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும்

விஜய் ஒன்றும் தொடர் வெற்றிகளைக் குவித்து முன்னனி நடிகராகிவிட்டவரல்ல... ஆரம்பகாலம் முதலே தோல்வியால் தழுவிக் கொள்ளப்பட்டு வளர்ந்தவர். முன்னணி நடிகராக வளர்ந்த பிறகும், சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்விகளால் பாடம் கற்று இப்போது அவற்றைச் சீர்செய்துகொண்டு வேறொரு வழியில் பயணம் செய்கிறார்.

செம மார்க்கெட்

செம மார்க்கெட்

கதாநாயகனாக நடிப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை எனக் கருதப்பட்ட விஜய் இன்று கோலிவுட் மார்க்கெட்டை கைக்குள் வைத்திருக்கும் நடிகர். மலையாளத் திரையுலகிலும் அதிகபட்ச மார்க்கெட்டை கொண்டிருக்கும் தமிழ் நடிகர் இவர்தான். ரஜினி ரசிகர்களை வைத்து தமிழில் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே, விஜய் ரசிகர்களை வைத்து மலையாளத்தில் படம் வெளிவந்துள்ளதே இதற்கு சாட்சி.

விஜய் 25

விஜய் 25

வெற்றித் தருணங்களில் குதிக்காதவர்கள் தான் தோல்விகளையும் எளிதாகத் தாங்கித் தொடர்ந்து நடைபோட முடியும். மீண்டெழுந்து இப்போது வசூல் சாதனைத் திரைப்படங்களைக் கொடுத்து வருகிறார் விஜய். ஹீரோவாக இன்று 25 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார் விஜய். எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கி வைத்து, முன்னேறி நடைபோடும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்!

English summary
Vijay, who debuted as hero in the 1992 film 'Naalaiya theerppu', completes 25 years today. His fans are celebrating social networks with the 25th anniversary of Vijay's cinematic journey as hero. #Vijay25

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil