Just In
- 15 min ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 1 hr ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 1 hr ago
இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தென்னிந்திய திரைப்படங்கள்.. ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
- 2 hrs ago
காமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!
Don't Miss!
- News
மக்களே உஷார்... மீண்டும் வருகிறது ஒரு மழை!
- Automobiles
சுற்றுலா பயணிகளை அலற வைத்த புலி... என்ன செய்தது என தெரிந்தால் ஷாக் ஆயிருவீங்க... திக்... திக்... வீடியோ
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Sports
ஏமாற்றம்.. தோனியை சீண்டிய அந்த விமர்சனம்.. சிஎஸ்கேவில் இருந்து நீக்கப்பட்டார் ஹர்பஜன்.. என்னாச்சு?
- Lifestyle
உங்க ராசிப்படி உங்ககிட்ட இருக்கும் அற்புதமான ரகசிய குணம் என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
- Education
CMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'ரோஜாவில் தொடங்கிய ரஹ்மான் மேஜிக்' - ஏ.ஆர்.ரஹ்மான் 25 #25YearsOfRahmanism -2
1992-ம் ஆண்டு வெளியான 'ரோஜா' படத்தின் முலம் திரையிசைக்கு அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்குப் பாய்ச்சியது இசையின் புதிய வடிவம். பழமைக்கும், புதுமைக்கும் இடையிலான மெல்லிய இடைவெளியில்தான் புகுந்து விளையாடியது ரஹ்மானின் கீபோர்ட்.
அவர் பணியாற்றிய விளம்பரங்களின் ஜிங்கிள்ஸ் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த நேரம் அது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

மணிரத்னத்துடன் ஃபர்ஸ்ட் மீட் :
ஒரு நண்பரின் பார்ட்டி ஒன்றில் மணிரத்னத்தைச் சந்திக்கும்போது சினிமா வாய்ப்புக் கேட்கிறார் ரஹ்மான். கார்ஷெட்டைப் போன்ற தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு மணிரத்னத்தை அழைக்கிறார். அங்கு போன மணிரத்னம் அவரது இசையைக் கேட்டு அசந்துபோய் 'ரோஜா' படத்தில் அறிமுகப்படுத்துகிறார். 'ரோஜா நாயகன்' என்றால் அர்விந்த்சாமி மட்டும் நினைவில் வருவதில்லை என்பதுதான் ரஹ்மானின் இசை ராஜ்ஜியத்துக்குக் கிடைத்த வெற்றி.
'உலகைக் கட்டிவிட ஆசை...' :
'ரோஜா' படத்திற்காக ரஹ்மான் இசையமைத்த பாடல் 'சின்னச் சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை...'. அந்தப் பாடல்தான் சினிமாவில் அவரது ஐ.டி கார்டு. சிறுவயதிலிருந்தே இசை தொடர்பான டெக்னாலஜி மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். அதனாலேயே, கீபோர்ட் முதலிய இசைக்கருவிகளில் அவருக்குப் பிடித்தபடி ஆல்டர் செய்து வைத்திருந்தார்.

இசையின் துல்லியத்தன்மை :
ரஹ்மான் இசையின் துல்லியத்தன்மை என்பது இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. திரைவாழ்வின் முதல் படத்திலிருந்தே அவரது ஸ்பெஷல் அதுதான். தான் இசையமைத்து வெளிவந்த பாடல்களை தியேட்டரில் கேட்டுவிட்டு, சவுண்ட் க்ளாரிட்டி மோசமாக இருப்பதைக் கேட்டு அதோடு திரைப்படங்களுக்கு இசையமைப்பதை நிறுத்திவிடலாமா என யோசித்த கலைஞர் அவர். அதோடு நின்றிருந்தால் இப்போது நாம் உலகின் தலைசிறந்த இசையை ஹெட்போனில் கேட்டுக்கொண்டிருந்திருக்க முடியாது.
'புது வெள்ளை மழை...' - ரஹ்மானின் மேஜிக் :
பாடல் முழுவதும் குரலுக்குப் பின்னணியில் ஒரே இசை ஒலித்துக் கொண்டிருக்கும். ஹை-பிட்ச்சில் வரும்போது மட்டும் வயலினை இழுத்து மீட்டியிருப்பார். கண்ணாடிச் சில்லுகள் தெறிக்கும் சத்தம், அருவியின் ஓசை என கூடலுக்கான விஷுவலில் இசையின் அத்தனை பிரமிப்பும் அடங்கியிருக்கும். ஆண் குரலுக்குப் பின்பான இசையற்ற நிலையை நாம் ரசித்த இசையே இட்டு நிரப்பும். அதுதான் ரஹ்மானின் மேஜிக்!
உலகம் ரசித்த இசையின் சத்தம் :
'ருக்குமணி ருக்குமணி என்ன சத்தம்... சத்தம்...' பாடல் மூலமாக ரஹ்மானுக்கு Tribute செய்யும் விதமாக அலுவலகத்தில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒலியெழுப்பி இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். துபாய் கிளப் எஃப்.எம் சார்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடலை ஆர் ஜே பவித்ரா பாடியிருக்கிறார். இதைவிட அந்தப் பெரும் கலைஞனின் இசைப் பெருமையைச் சொல்லிவிட என்ன இருக்கிறது?

'தமிழா... தமிழா...' :
'ஆளப்போறான் தமிழன்...' பாடப்படும் இந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகும் 'தமிழா... தமிழா...' எனும் அந்த எவர்க்ரீன் பாடல் ஃபேவரிட் லிஸ்டில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மொட்டு மலர்வதைப் போல மென்மையாக ஆரம்பித்து தட்டித் தூக்குவார். வெறிகொண்ட இசைக்குப் பின் மெல்லிய வருடலை ஏற்படுத்துவார். திரையிசையில் இசைப்புயலின் 25 ஆண்டுகள்... புது இசைக்கான வயது!
- தொடரும்...