twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கரண்-அஞ்சலி நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’

    By Staff
    |

    Karan with Anjali in Thambi Vettothi Sundaram
    பத்தாண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்" என்ற ஒரு படம் உருவாகிறது.

    ஜே.எஸ். 24 ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. செந்தில்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதைக் களமும் பெயரைப் போலவே புதிய, மாறுபட்ட கதைக் களமாம்.

    படம் குறித்து இயக்குநர் வி.சி. வடிவுடையான் இப்படிக் கூறுகிறார்:

    “இந்தப் படத்தில் உண்மையில் இரண்டு கதாநாயகர்கள். ஒன்று கரண். இன்னொன்று கதை! ஓர் உண்மைச் சம்பவத்தை, சாயம் பூசாமல், வீரியம் கெடாமல், அப்பட்டமாக உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருக்கிறோம். இது வாழ்ந்தவர்களின் கதை என்பது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரியும்" என்கிறார்.

    அப்படி என்ன கதை?

    “தமிழகத்திலேயே அதிகம் படித்தவர்கள் வசிக்கும் மாவட்டம், குமரி மாவட்டம். ஆனால் அங்குதான் குற்றவாளிகள் அதிகம் என புள்ளிவிபரம் சொல்கிறது. இந்த முரண்பாட்டால் நிகழந்த ஒரு உண்மை சம்பவம்தான் கதை. யதார்த்த வாழ்க்கையில் என் கண்முன் நடந்த காதலும் வன்முறையும் வீரியம் குறையாமல் இந்த கதையோடு பின்னப்பட்டு இருக்கிறது.

    இந்த உண்மை சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே படபிடிப்பும் நடந்ததால் காட்சிகள் படமாக்கும் விதத்தை பார்த்து அட! இது அவரோட கதையில்ல!! என்று மக்கள் ஆச்சரியுபட்டவிதமே இப்படத்தின் வெற்றியை மேலும் உறுதிசெய்யும்" என்கிறார் வடிவுடையான்.

    இப்படத்தின் வசனகர்த்தா பா.ராகவன் கதை நடந்த இடத்திற்கே சென்று குமரி மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கு மாறாமல் உணர்வுகளை வசனமாக்கியிருகிறார் என்கிறார் படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்.

    கதை பிண்ணனிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக குமரி மாவட்டத்து பாரம்பரிய இசைக்கருவிகளை பயன் படுத்திருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

    கதையின் கதாபாத்திரங்கள் கரணுக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சலி. சரவணன், கஞ்சா கருப்பு,சண்முகராஜ் நந்தாசரவணன் சரவணசுப்பையா பாலசிங் காதல் தண்டபாணி வெண்ணிறஆடை மூர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

    அந்தமான், லட்ச தீவுகள், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடத்த திட்டமிடபட்டுள்ளனர்.

    'படம் தயாரிப்பது என்று முடிவு செய்தபிறகு குறைந்தது ஐம்பது, அறுபது பேரிடமாவது கதை கேட்டிருப்பேன். இந்தக் கதை என்னைத் தொட்ட அளவுக்கு இன்னொரு கதை மனதை நெருங்கவில்லை" என்கிறார் தயாரிப்பாளர் ஜே செந்தில்குமார்.

    மக்கள் இதயங்களைத் தொட்டா சரிதான்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X