twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயனதாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்!

    By Staff
    |

    Nayantara
    ரமலத்துக்கு ஆதரவு - நயனதாரா படங்களை திரையிட மாதர் சங்கங்கள் எதிர்ப்பு

    ரமலத் - பிரபுதேவா - நயனதாரா விவகாரம் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. என் தமிழ் தாய்மார்கள், சகோதரிகள், மாதர் சங்கங்கள் நயனதாராவைக் கவனித்துக் கொள்வார்கள் என்று ரமலத் கூறியதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக மாதர் சங்கங்கள் களம் இறங்கியுள்ளன.

    பிரபு தேவா - நயனதாரா கள்ளக்காதலால் பிரபுதேவாவின் மனைவி ரமலத் கொதிப்படைந்துள்ளார். பகிரங்கமாக நயனதாராவை விமர்சித்து வருகிறார். என்னிடமே நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள பெர்மிஷன் கேட்கிறார் பிரபுதேவா என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    முன்பு அவர் அளித்த பேட்டியின்போது நயனதாராவை எங்காவது பிரபுதேவாவுடன் பார்த்தால் அடிப்பேன் என்று கோபமாக கூறியிருந்தார். இதற்கு நயனதாரா அளித்த பதிலில், என்னை விமர்சிக்க ரமலத் யார் என்று கேட்டிருந்தார்.

    அதற்கு ரமலத் அளித்த சூடான பதிலில், பிரபுதேவாவுடன் 15 ஆண்டுகள் குடித்தனம் நடத்தி 3 குழந்தைகளைப் பெற்றவள் நான். எனக்கும் என் குழந்தைகளுக்கும் எல்லாமே என் கணவர்தான். எங்களுக்கு மட்டுமே அவர் சொந்தம்.

    இந்தக் காதல் விவகாரம் குறித்த செய்திகளால் நான் என மனக்குறையை வெளியிட்டேன். அதை சொல்ல எனக்குத் தகுதியில்லை என்கிறார் நயனதாரா.

    நயன்தாரா சொல்லியிருப்பதற்கு என் தமிழகத் தாய்மார்களும் சகோதரிகளும் பதில் அளிப்பார்கள். தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் என் கண்ணீரைத் துடைப்பார்கள் என நம்புகிறேன் என்று கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.

    இதையடுத்து மாதர் சங்கங்கள் சில களத்தில் குதித்துள்ளன. நயனதாராவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவை நயனதாராவின் திரைப்படங்களை தமிழிகத்தில் திரையிட விடாமல் தடுக்கப் போவதாக அறிவித்துள்ளன.

    மேலும் மீறி எங்காவது அவரது படம் திரையிடப்பட்டால், தியேட்டர்கள் முன்பு பெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவை எச்சரித்துள்ளன.

    இதனால் பிரபு தேவா - நயனதாரா விவகாரம் நடுத் தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X