twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ராஜபக்சே தூது... தூக்கியெறிந்த ரஜினி!' - கவிஞர் தாமரை

    By Chakra
    |

    Rajinikanth
    இலங்கை திரைப்பட விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல் நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை.

    சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விழாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழாவுக்குப் போகமாட்டேன் என்றும் கூறிவிட்டார். புதிய தூதராக சல்மான் கான் பொறுப்பேற்றுள்ளார்.

    அமிதாப் குடும்பத்திலிருந்து அபிஷேக், ஐஸ்வர்யா ராய் என யாருமே இந்த விழாவில் பங்கேற்க மாட்டோம் என் அறிவித்துள்ளனர்.

    இதனை இலங்கை அரசு முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே, பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, முன்னணி இந்தியக் கலைஞர்கள் அனைவரும் கொழும்பு வருவார்கள் எனக் கூறி வருகிறது.

    இந் நிலையில், உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த விழாவுக்கு வருமாறு இலங்கை அரசு சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பிதழ் கொடுத்தது.

    பொதுவாக, ஒரு மரியாதைக்காகவாது இதுபோன்ற அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் ரஜினி, இந்த அழைப்பிதழைப் பெறவும் மறுத்துவிட்டார். அவரது அலுவலகமும் இந்த அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தச் செய்தி வெளியில் தெரிந்த பிறகுதான், தமிழ் திரையுலகம் வேகத்துடன் செயல்பட்டு விழாவைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தது.

    இந் நிலையில் அதிபர் ராஜபக்சேவே ரகசியமாக தூது அனுப்பியுள்ளார் ரஜினிக்கு. எப்படியாவது இந்த விழாவில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு முறை இதுபற்றிப் பேசவோ யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்று வேகமாகக் கூறியுள்ளார்.

    இந்தத் தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளவர், கவிஞர் தாமரை. அவர் கூறுகையில்,

    "தமிழ் மக்களைக் கொன்றொழித்துவிட்டு ஒன்றும் நடவாததுபோல இருக்க இலங்கை அரசு முயல்கிறது. இதை இப்படியே விட்டுவிட முடியாது. இவ்வளவுக்கும் பிறகும், இலங்கை அரசுத் தரப்பில் திரை உலகினரைத் தனிப்பட்டரீதியில் தொடர்புகொண்டு வசப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.
    இந்த 'ஐஃபா' விழாவில் கலந்துகொள்ளுமாறு ரஜினிகாந்த்துக்கு ராஜபக்சே தூதுவிட்டார். ஆனால், ரஜினி அதை வந்த வேகத்தில் நிராகரித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ரஜினியின் அலுவலகத்தில் நாம் தொடர்பு கொண்டபோது, "இலங்கைத் தரப்பில் யார் தொடர்பு கொண்டாலும் அதற்கு பதிலளிக்கவோ, பெரிதாக ரியாக்ட் பண்ணவோ வேண்டாம் என்று ரஜி்னி கூறிவிட்டார் என்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X