»   »  அமிதாப், ஷாருக்-அன்புமணி கோரிக்கை

அமிதாப், ஷாருக்-அன்புமணி கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
Anbumani

சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான் ஆகியோர் சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் புகை பிடிக்கக் கூடாது என்று முன்பு அன்புமணி கோரிக்கை விடுத்தார். தற்போது ரஜினி தனது படங்களில் புகை பிடிப்பது போல நடிப்பதில்லை. அதேபோல சமீபத்தில் விஜய்க்கும் இதே கோரிக்கையை வைத்தார் அன்புமணி. அவரும் ஏற்றுக் கொண்டார். சிம்புவும் தானாகவே இனி தம் கிடையாது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோருக்கும் இதே கோரிக்கையை வைத்துள்ளார் அன்புமணி. இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமா நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் முதல் முறையாக சிகரெட் புகைக்க 52 சதவீத குழந்தைகள் கற்றுக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று நடிகர் ஷாருக்கானிடம் நான் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளேன் (ஆனாலும் ஷாருக் விட்டது போலத் தெரியவில்லை. சமீபத்தில் கூட கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவர் ஜாலியாக பப் இழுத்து சலசலப்பை ஏற்படுத்தினார்). மீண்டும் அவருக்கு நான் இதே கோரிக்கையை விடுகிறேன்.

நடிகர் அமிதாப்பச்சனிடமும், சினிமாவில் புகை பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பீடி மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஒடு படத்துடன் எச்சரிக்கை வாசகம் இருந்தால் அது நல்ல பலனை தரும். அரசியல் காரணங்களாலும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாலும் அந்த திட்டத்தை அமுல்படுத்த முடியவில்லை.

இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அபாயகரமான அளவில் உள்ளது. ஆனால் வளர்ந்த நாடுகளில் இது குறைந்து வருகிறது என்றார் அன்புமணி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil