»   »  வசந்தபாலனின் அங்காடி தெரு

வசந்தபாலனின் அங்காடி தெரு

Subscribe to Oneindia Tamil
Bhvana with Bharath

வெயில் படத்தைக் கொடுத்த ஷங்கரின் சிஷ்யன் வசந்தபாலன் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார். அங்காடி தெரு என வித்தியாசமாக அப்படத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.

பாவ்னா, பரத், பசுபதி, ஸ்ரேயா ரெட்டி, பிரியங்காவை வைத்து உருவாக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவின் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்திய வசந்தபாலன், சில கால இடைவெளிக்குப் பின்னர் 2வது படத்திற்கு கிளம்பி விட்டார்.

அங்காடி தெரு என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை ஷங்கர் தயாரிக்கவில்லை. மாறாக ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இப்படத்தில் நாயகனும், நாயகியும் புதுமுகங்களாம். பள்ளிக்கூட மாணவன் ஒருவர்தான் நாயகனாக நடிக்கவுள்ளாராம்.

படம் முழுவதும் நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் படமாக்கப்படவுள்ளது. தனது முதல் படமான வெயிலை சொந்த ஊரான விருதுநகர் பக்கம் வைத்து சுட்டார் வசந்தபாலன். இப்போது நெல்லைக்கு இடம் பெயருகிறார்.

விரைவில் படத்தின் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு தேதி குறித்த விவரங்களை வெளியிடவுள்ளாராம் வசந்த பாலன்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil