twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா காலேஜ்!

    By Staff
    |

    Aishwarya Rai
    மருமகள் ஐஸ்வர்யா ராயின் பெயரில் அமையவுள்ள மகளிர் கல்லூரிக்கு மாமனார் அமிதாப்பச்சன் அடிக்கல் நாட்டினார்.

    உ.பி. மாநிலம் பாரபங்கியில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் புதிய மகளிர் கல்லூரியை அமிதாப் பச்சன் கட்டுகிறார். இக்கல்லூரிக்கு ஐஸ்வர்யா பச்சன் மகளிர் கல்லூரி என பெயரிடப்பட்டுள்ளது.

    இக்கல்லூரி அமையவுள்ள நிலம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தாமதமாகி வந்தது.

    சமீபத்தில் அமிதாப்புக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடுக்கி விட்டார் அமிதாப். நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    அமிதாப் பச்சன் அடிக்கல்லை நாட்டினார். விழாவில் அவருடைய மனைவி ஜெயா பாதுரி பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், வழக்கம் போல சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    முதலில் பூமி பூஜை நடந்தது. அதன் பின்னர் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    விழாவில் பச்சன் குடும்பத்தினர், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர்கள் தவிர 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, பரூக் அப்துல்லா, இந்திய தேசிய லீக் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா, எம்.பி. ஜெயப்பிரதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    ஐஸ்வர்யா ராய் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனது குடும்பத்தின் மூத்தவர்களால் எனக்கு இந்தக் கெளரவம் கிடைத்துள்ளது. அது பெருமையாக உள்ளது என்றார்.

    ரஜினி ஜோடி-ஐஸ் சந்தோஷம்..

    இதற்கிடையே ரோபோட் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளதாக ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

    ஷங்கரின் பிரமாண்டப் படமான ரோபோட்டில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் சமீபத்தில் அவர் கையெழுத்திட்டார். அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஐஸ்வர்யா அளித்துள்ள பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    ஜீன்ஸ் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் என்னிடம் அவரது பல படங்களுக்கு நடிக்கக் கூப்பிட்டபடிதான் இருந்தார். ஆனால் இந்தி படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்ததால் நடிக்க முடியாமல் போய் விட்டது. மற்றபடி நடிக்காததற்கு வேறு காரணம் இல்லை.

    ரஜினி சாரும், ஷங்கரும் திறமை மிக்கவர்கள். அவர்களுடன் இணைவது சந்தோஷமாக இருக்கிறது.

    சமீபத்தில் ஷங்கர் 'ரோபோ' படத்தின் கதையைக் கூறினார். கதை குறித்து இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கிறது. இப்படத்தில் நான் நடிப்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது என்றார் ஐஸ்வர்யா.

    ஐஸ்வர்யாவே ரோபோட் படத்தில் நடிப்பதை உறுதி செய்து விட்டதால் படத்தில் அவர் இடம்பெறுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.

    தற்போது ஷங்கர் கதையை மெருகேற்றும் வேலையில் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கதாபாத்திரங்கள், யார் யாரை அந்த கதாபாத்திரங்களுக்குப் போடுவது, என்ன மாதிரியான தேவைகள், கிராபிக்ஸ் பணிகளை எப்படிச் செய்வது, ஷூட்டிங்கை எங்கு நடத்துவது என்பது உள்ளிட்ட ஆயத்தப் பணிகளில் அவர் தீவிரமாக இருக்கிறார்.

    குசேலன் படத்தை முடித்து விட்டு ரஜினி வந்தவுடன், ரோபோட் படத்தைத் தொடங்குவதற்கான முனைப்புடன் தற்போது அவர் பிசியாகியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X