»   »  செந்தில் மகன் திருமணம்- கவுண்டமணி தலைமை

செந்தில் மகன் திருமணம்- கவுண்டமணி தலைமை

Subscribe to Oneindia Tamil
Senthil
நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபுவுக்கு கவுண்டமணி தலைமையில் மதுரையில் திருமணம் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் நகைச்சுவை ஜோடி என்றால் அது கவுண்டமணி-செந்தில்தான். இன்றைக்கு இருவருமே கிட்டத்தட்ட களத்தில் முன்பு போல இல்லை என்றாலும் கூட, அவர்களது நூற்றுக்கணக்கான நகைச்சுவைத் தோரணங்கள், சிடுமூஞ்சிகளுக்குக் கூட கண்களில் நீர் முட்டுமளவுக்கு சிரிப்பை வரவழைக்கும் ரகங்கள்.

பல தொலைக்காட்சி சேனல்கள் கவுண்டமணி-செந்தில் தயவில்தான் கலகலப்பாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த நகைச்சுவை மன்னர்களில், கவுண்டமணி எப்போதுமே பத்திரிகையாளர்களிடமிருந்து விலகியே நிற்பவர். இன்றுவரை எந்த பத்திரிகைக்கும் பேட்டிகூட கொடுத்ததில்லை. செந்தில் அதற்கு நேர் எதிர் ரகம்.

இந்த இரு நகைச்சுவைத் திலகங்களும் மீண்டும் ஒரே மேடையில் தோன்றப் போகிறார்கள். அது செந்தில் மகன் மணிகண்ட பிரபு-ஜனனி பிரியா வந்திதா திருமண மேடை.

மதுரை பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் வருகிற பிப்ரவரி 3ம் தேதி காலை நடக்கும் இந்த திருமணத்தை தலைமை தாங்கி நடத்துகிறார் கவுண்டமணி.

பிப்ரவரி 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. திருமணம் வரவேற்பு சென்னையில் பிப்ரவரி 6ம் தேதி மாலை நடக்கிறது. அரும்பாக்கம் நூறடி சாலையில் உள்ள ஐஸ்வர்யா மகாலில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுகவுக்காக செந்தில் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

செந்திலின் மூத்த மகன் நவீன் (இவர் ஒரு பல் டாக்டர்) உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டது. படம் என்ன ஆனதோ தெரியவில்லை.

அதே போல இன்னொரு மகனான கார்த்திக் சினிமாட்டோகிராபி கற்றுள்ளார். அண்ணன் நவீனின் படத்தில் இவர் உதவி சினிமாட்டோகிராபி செய்ய இருந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil