»   »  காங். மகளிர் அணி தலைவியாகும் ஜீவிதா?

காங். மகளிர் அணி தலைவியாகும் ஜீவிதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Jeevitha

தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஜீவிதாவை ஆந்திர மாநில காங்கிரஸ் மகளிர் அணித் தலைவியாக நியமிக்க கட்சி அக் கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அரசியலுக்கு வரப் போவதாக பேச்சு அடிபடுகிறது. விரைவில் கட்சி ஆரம்பிப்பேன் என சிரஞ்சீவியும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிரஞ்சீவி கட்சியில் சேருவீர்களா என்று செய்தியாளர்கள் டாக்டர் ராஜேசகரிடம் கேட்டபோது, அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. எனவே அவரது கட்சியில் சேரும் பேச்சுக்கே இடமில்ைல. மேலும் நான் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியில் நீண்ட காலமாக தொடர்பு வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த சிரஞ்சீவி ரசிகர்கள் ஹைதராபாத்தில் ராஜசேகரின் குடும்பத்தினர் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் ராஜசேகரும், அவரது மகள் ஷிவானியும் காயமடைந்தனர்.

இந்த நிலையில், ராஜசேகரின் மனைவி ஜீவிதாவை மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்க கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளதாம். தாக்குதல் தொடர்பாக ஜீவிதா அளித்த ஆவேசப் பேட்டிதான் அவருக்கு கட்சிப் பொறுப்பை தேடித் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. அனுமந்தராவ், அமைச்சர் சத்யநாராயணன், காங்கிரஸ் பிரமுகர் தனம் நாகேந்தர் ஆகியோர் ஜீவிதாவிடம் நேராக பேசியுள்ளனராம். ஜீவிதாவுக்கும் இந்தப் பதவியை ஏற்க சம்மதமாம்.

இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பியுள்ளனராம். இதைத் தொடர்ந்து வெகு விரைவில் ஜீவிதா காங்கிரஸ் மகளிர் அணித் தலைவியாக பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.

ஏற்கனவே தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவியாக நடிகை ரோஜா இருக்கிறார். அங்குள்ள சாராய கடைகளுக்கு எதிராக படு ஆவேசமாக போராட்டங்களையும் நடத்திக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அனல் பறக்கும் ஒரு மகளிர் அணித் தலைவியாக ஜீவிதா உருவெடுக்கவுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil