ராம.நாராயணனுக்கு குஷ்பு ஆதரவு

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 7-ம் தேதி நடக்கிறது. இதில் தற்போது தலைவர் பதவியில் உள்ள இயக்குநர் ராம. நாராயணன் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுகிறார். பெரும்பாலும் தற்போது பதவியில் உள்ள அனைவருமே இவருடைய அணியில் உள்ளனர்.
இவர்களை எதிர்த்து பஞ்சு அருணாச்சலம் தலைமையில் நடிகை ராதிகா உள்ளிட்டோர் தனி அணியாகப் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ராம.நாராயணன் அணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று பிலிம் சேம்பர் வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு, தயாரிப்பாளர் சங்கம் எந்த கோஷ்டிப் பூசலுமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ராம நாராயணன் தலைமையிலான அணி பதவிக்கு வருவதுதான் ஒரே வழி என்றார்.
இயக்குநர் சேரன் பேசுகையில், இனிமேலாவது தமிழர் மட்டுமே தமிழ் சினிமா அமைப்புகளில் பதவிக்கு வர வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











