twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் கடவுள்: பிரமிக்க வைக்கும் பாலா!

    By Staff
    |

    Bala and Arya
    இத்தனை நாள் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் பாலா. ஒரு மாதம், ஒரு வருடம் அல்ல... மூன்று நெடிய ஆண்டுகள்...

    தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பெற்றிராத புதிய அனுபவத்தைத் தர வருகிறது பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள நான் கடவுள் திரைப்படம்.

    இதுவரை அந்தப் படத்தின் ஒரு சில ஸ்டில்கள்தான் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. படம் முழுவதும் முடியும் வரை அமைதி காத்த பாலா, இப்போது தன் பிஆர்ஓ நிகில் முருகன் மூலம் வேண்டிய மட்டும் ஸ்டில்களை அனுப்பியுள்ளார்.

    ஒவ்வொரு புகைப்படமும் பாலாவின் மீது பிரமிப்பையும், படத்தைப் பற்றிய எதிரிப்பார்ப்பையும் கூட்டுவதாக உள்ளன.

    இந்தப் படத்தின் கதாநாயகன் ஆர்யா. மொத்தம் 3 ஆண்டுகள் ஜடா முடியும், நெஞ்சைத் தொடும் தாடியுமாக ஒரு விரதம் போல காத்திருந்தார். எவ்வளவோ பேர் அவரை அதைரியப்படுத்தியும், பாலா மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக புதிய படங்களையும் ஒப்புக் கொள்ளவில்லை, தாடியையும் மழிக்கவில்லை. தன்னுடைய முதல் படம் இதுதான் என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் என்கிறார் பெருமிதத்துடன்.

    ராஜாவின் பிரமிப்பு!:

    படத்தின் முக்கியமான விஷயம், நமது இசைஞானியின் இசை. பாடல்களில் புதிய சாதனைப் படைத்திருக்கும் ராஜா, பின்னணி இசையில் பல காட்சிகளில் ஜெயமோகனின் வசனங்களுக்கு வேலை இல்லாமல் செய்திருக்கிறாராம்.

    இந்தப் டத்தைப் பார்த்து பிரமித்துப் போன ராஜா, தன் விருப்பப்படி இசையமைக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படும் என்றாராம். அதுமட்டுமல்ல, பின்னணி இசையில் புதிய பரிமாணம் காட்ட பிரபல இந்தி இசையமைப்பாளர் உத்தம் சிங்கையும் (தில் தோ பாகல் ஹை இசையமைப்பாளர்) தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார்.

    ஜனவரி 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் நான் கடவுள் இசையின் மூலம், 'நான் இசை' என உலகுக்கு அழுத்தமாக நிரூபிப்பார் ராஜா என்கிறார்கள் படக் குழுவினர்.

    படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களும் இது ஒரு சர்வதேச தரத்தில் அமைந்துள்ள படம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கின்றனர். தசாவதாரத்தில் பெருமாளைப் புகழ்ந்து பாடல் புனைந்த வாலியின் பேனா, இந்தப் படத்தில் சிவனின் மகிமையைப் பாடலாக்கியிருக்கிறது.

    படத்தின் கதையை முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார் பாலா.

    மூட நம்பிக்கை காரணமாக தன் மகனை காசியில் அனாதையாக விட்டுவிட்டு வருகிறார் ஒரு தந்தை. அந்தச் சிறுவன் காசியில் சாதுக்களின் மத்தியில் ஜடாமுடியும், தாடியும் வைத்துக் கொண்டு ஒரு இளம் சாதுவாக வளர்கிறான். தன் தவறை உணர்ந்த தந்தை மீண்டும் மகனைத் தேடி காசிக்கு வருகிறார். மகனின் நிலையைக் கண்டு அதிர்ந்து போய், மீண்டும் அவனை தன்னுடன் ஊருக்குக் கூட்டிச் செல்ல முயல்கிறார். மகனும் தமிழ்நாட்டுக்கு வருகிறான்... அதன் பிறகு நடக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்தான் படம, அந்த இளைஞனை 'கடவுளாக' மாற்றுகின்றன!

    கடவுளை 'தரிசிக்க' காத்திருக்கிறோம் பாலா!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X