twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்கடா அந்த கோபி...?-சாமியாடும் டிஆர்

    By Staff
    |

    T Rajendar
    தன் மகன் சிம்புவை இம்சை அரசன் என்றும் தேவையின்றி படத்தில் தலையிடுவதாகவும் கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் தருண் கோபி மீது கடும் கோபம் கொண்டுள்ளாராம் இயக்குநர் மற்றும் லதிமுக தலைவர் டி ராஜேந்தர்.

    திமிரு, காளை படங்களை இயக்கியவர் தருண் கோபி. இவர் இப்போது 10 கதாநாயர்களுள் ஒருவராக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

    இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டின்போது சிம்புவை தாறு மாறாகத் திட்டி பேட்டியளித்த தருண் கோபி, அவரை இம்சை அரசன் என்று கூறினார். தன் வேலையைப் பார்க்காமல் இயக்குநரின் வேலைகளில் குறுக்கிட்டு படத்தைக் கெடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

    திமிரு படத்தின் நாயகன் விஷாலை ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கத் தெரியாதவர் என்று விமர்சித்திருந்தார்.

    கடந்த இரு தினங்களாக மீடியா முழுக்க இந்த செய்தியே ஆக்கிரமித்துக் கொண்டது.

    இந்த விவரங்களைப் பத்திரிகைகள் மூலமாகவும், தங்களுக்கு வேண்டப்பட்ட செய்தியாளர்கள் மூலமும் தெரிந்து கொண்ட டிஆர், தருண் கோபி மீது கடும் ஆத்திரத்தில் உள்ளாராம்.

    வேலையின்றி சும்மா கிடந்த தருண் கோபிக்கு வாய்ப்புக் கொடுத்த தன் மகன் மீதே சேற்றை வாரி இறைப்பதா என கொதித்துப் போய் உள்ளாராம். 'எங்கடா இருக்கான் அந்த கோபி... போட்றா லைனை... இப்ப காட்டறேன் சிம்பு யாரென்று?' என ஆத்திரப்பட்டவர், தருண் கோபி மீது நடிகர் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளார். இது பலனளிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X