twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வண்ணத்துப் பூச்சி'!

    By Staff
    |

    Vannathupoochi movie still
    கமல்ஹாசனின் முன்னாள் உதவியாளரான அழகப்பன் குழந்தைகளுக்காக ஒரு படம் உருவாக்குகிறார். படத்துக்குப் பெயர் வண்ணத்துப் பூச்சி.

    குழந்தைகள் போடும் ஆடைகளை பெரிய பெரிய நாயகிகள் அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டுவதுதான் இந்திய சினிமாவின் பேஷனாகி விட்டது. ஆனால், குழந்தைகளுக்காக, குழந்தைகளின் மன ஓட்டங்களை, கனவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் படம் எடுப்பது ரொம்பக் குறைவு. குறிப்பாக தமிழில் அப்படிப்பட்ட படத்தை பார்க்கவே முடிவதில்லை.

    ஆனால் இந்திக்காரர்கள் நிறைய மாறி விட்டார்கள். மட்டன் மசாலா, சிக்கன் மசாலா என்று மசாலாத்தனமாக இருந்த இந்த சினிமா இன்று நிறைய மாறியுள்ளது. இல்லாவிட்டால், ஓம் சாந்தி ஓம் படத்துக்குக் கிடைக்கும் அதே வரவேற்பு தாரே ஜமீன் பர் படத்துக்கும் கிடைக்குமா என்ன?

    தமிழில் இப்படிப்பட்ட படங்கள் வராதா என்ற கவலையைப் போக்கும் வகையில் வண்ணத்துப்பூச்சியை உருவாக்குகிறார் அழகப்பன். ஒரு காலத்தில் கமல்ஹாசனின் உதவியாளராக இருந்தவர்தான் அழகப்பன்.

    குழந்தைகளின் வண்ண உலகம்தான், அவர்களின் கனவுகளின் சின்ன உலகம்தான் இந்தப் படத்தின் கதைக்களம் என்கிறார் அழகப்பன்.

    பிசியான இந்தக் காலத்து வாழ்க்கையில் நாம் எப்படியெல்லாம் குழந்தைகளைப் புறக்கணிக்கிறோம், அவர்களின் கனவுகளை, எண்ணங்களை, ஆசைகளைப் புறக்கணிக்கிறோம் என்பதை இந்தப் படத்தில் விவரிக்கவுள்ளாராம் அழகப்பன்.

    படம் குறித்து அழகப்பன் மேலும் கூறுகையில், பெற்றோர் என்பது அதிகார மையத்தின் ஆட்சிப் பீடமாக பலர் கருதுகிறார்கள். நாம் சொல்வதைதத்தான் குழந்தைகள் கேட்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர்.

    ஆனால் அப்படி அல்ல. பெற்றோர்களுக்கு முக்கியமாக தேவை அன்பு, அரவணைப்பு, சகிப்புத்தன்மைதான். ஒவ்வொரு தாய், தந்தையும், தங்களது குழந்தைகளிடம் அன்பையும், அரவணைப்பையும்தான் காட்ட வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

    கடுகளவு துன்புறுத்தலைக் கூட அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களின் கனவுலகத்தில் அவர்களை உலவ விட வேண்டும். எந்தவித கட்டாயத்திற்கும் அவர்களை ஆட்படுத்தக் கூடாது. இதுதான் வண்ணத்துப்பூச்சி படத்தின் கதை என்கிறார்.

    தமிழ் சினிமா கண்ட திறமையான கலைஞர்களில் ஒருவரான பாலா சிங் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தாத்தா வேடத்தில் அவர் வருகிறார். ஒரு தாத்தாவுக்கும், பேத்திக்கும் இடையிலான பந்தத்தையும், பாசத்தையும் மையக் கேரக்டர்களாக வைத்துள்ளார் அழகப்பன்.

    பேத்தி வேடத்தில் நடித்திருப்பவர் ஸ்ரீலட்சுமி. திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி 3வது வகுப்பு படிக்கும் குட்டிப் பாப்பா. திவ்யபாரதி என்ற கேரக்டரில் ஸ்ரீலட்சுமி நடிக்கிறார்.

    படத்தில் இன்னொரு இமயமும் இருக்கிறார். அவர் ரேவதி. மனித உரிமை ஆணைய நீதிபதியாக வருகிறார் ரேவதி. படத்தின் கதையைக் கேட்டதும், காசு கூட வாங்காமல் நடிக்க முன்வந்தாராம் ரேவதி.

    நல்ல படம் தர முடிவு செய்துள்ளேன். ஆனால் இது கமர்ஷியலாக வெற்றி பெறுமா என்பதை என்னால் சொல்ல முடியவில்ைல என்கிறார் அழகப்பன்.

    அழகை ரசிக்கும் தமிழ் ரசிகர்கள், இந்த அழகப்பன் படத்தை ஆராதிக்காமல் விட்டு விடுவார்களா என்ன?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X