twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிஷ்யனுக்கு மார்க் போட்ட கே.பி!

    By Staff
    |

    K Balachander with G Siva
    அரங்கேற்றம் சாயலில் இருக்குமோ என நினைத்த என்னை 65 மதிப்பெண்கள் போட வைத்துவிட்டது தனம் திரைப்படம் என்று பாராட்டியுள்ளார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

    கே.பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த ஜி.சிவா, தனம் என்ற புதிய படத்தை தயாரித்து, டைரக்டு செய்து இருக்கிறார். இது குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தாசியின் கதை. இதில், தாசியாக உயிர் சங்கீதா நடித்துள்ளார்.

    இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கிரீன் பார்க்கில் நடந்த்து. முதல் இசைத் தகடை கே.பாலசந்தர் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் பெற்றுக்கொண்டார். அப்போது பாலசந்தர் பேசியதாவது:

    என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. என் படத்தின் கதைகளை நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. முழுசாக் கூட சொல்ல மாட்டேன். காரணம் பலரிடம் கதையைச் சொன்னா நம்மை குழப்பி விடுவார்கள். நடிகர்-நடிகைகளிடம், நடிக்க வேண்டிய காட்சிகளை மட்டுமே சொல்வேன்.

    தனம் படத்தில், நான் இயக்கிய அரங்கேற்றம் படத்தின் சாயல் இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். ஆனால் சிவா என்னிடம் கதையைச் சொன்னார். அப்போது பத்து மார்க்கு கொடுக்கிற அளவுக்குத்தான் படம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் முழு படத்தையும் பார்த்துவிட்டு அசந்துபோனேன்.

    இந்தப் படத்துக்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. அதைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் நாளெல்லாம் பேசலாம். 10 மார்க்குகள் போட இருந்த என்னை 65 மார்க்குகள் போட வைத்து விட்டார் சிவா.

    படம் நன்றாக இருந்தாலும், சிலர் 41 மார்க்கு அல்லது 42 மார்க்குகளுக்கு மேல் கொடுப்பதில்லை. ஆனால், நான் இந்த படத்துக்கு 65 மார்க்குகள் கொடுக்கிறேன்!

    படப்பிடிப்பின்போது அதிக டேக் எடுப்பதிலும், மூன்று நான்கு காமிராக்களைப் பயன்படுத்துவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. சிலர் பதினெட்டு டேக் எடுத்து, கடைசியில் முதல் டேக்கைப் பயன்படுத்துவார்கள். மூன்று காமிராக்கள் எதற்கு? எது வேண்டுமோ, அதை மட்டும் எடுத்தால் போதாதா?

    உயிர் படத்தில் சங்கீதா உயிரைக் கொடுத்து நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து நான் அசந்து போனேன்.

    என்னுடைய அரங்கேற்றம் படத்துக்கு வந்த சலசலப்பு இந்த படத்துக்கும் வரும். சினிமாவில் இந்த மாதிரி சலசலப்புகள் இல்லாமலிருந்தால்தான் அதிசயம். ஆனால் அதையெல்லாம் பார்த்து பயப்படக்கூடாது என்றார் பாலச்சந்தர்.

    விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத் தலைவர் அன்பாலயா பிரபாகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X