»   »  'மிருகம்' மாதிரி கதை வேணும்!

'மிருகம்' மாதிரி கதை வேணும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Adhi with Padmapriya

சாமி இயக்கத்தில் உருவான மிருகம் படத்தை எடுத்த தயாரிப்பாளர் கார்த்திகேயன் இதே போன்று சமூக அக்கறை உள்ள படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி அரவாணிகள் பற்றி கதையை எடுக்க முடிவு செய்துள்ளார்.

மிருகம் திரைப்படம் துவக்கத்தில் பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும் ஒரு சமூக அக்கறையுள்ள படமாக வெளிவந்து அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றதில் அதன் தயாரிப்பளர் மற்றும் இயக்குநருக்கு ஏக சந்தோஷம். வணிக ரீதியாகவும் இப்படம் இருவருக்குமே அதிக லாபத்தை பெற்று தந்துள்ளது.

இப்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பதற்காக இப்படத்தில் புதிதாக சில காட்சிகளைச் சேர்த்து அனுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் சாமி.

இந்தப் புதிய பதிப்பில் பாலியல் தொடர்பான இன்னும் சில காட்கள் இடம் பெறப் போகிறதாம். நம் ஊரில் தான் இதுபோன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பும். ஆனால் வெளிநாடுகளில் இந்த பாலியல் தொடர்பான காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பாது என்பதால் தாராளமாக இக்காட்சிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் சாமி.

இந் நிலையில் மிருகம் படத்தின் தயாரிப்பாளரான கார்த்திகேயன் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார். மிருகம் படத்தைப் போலவே சமூக அக்கறை உள்ள புதிய படங்களை எடுக்கும் முயற்சிதான் அது. இவருடைய அடுத்த படத்தில், சமூகத்தில் அரவாணிகள் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்லும் கதையைக் எடுத்துள்ளாராம்.

இப்படத்தை இயக்குபவர் மிருகம் படத்தில் காமெடி காட்சிகளுக்கு உதவியாக இருந்த வேல்முருகன் தானாம். அவர் சொன்ன அரவாணிகள் கதையையே இப்படத்துக்கு ஓகே பண்ணியிருக்கிறார் கார்த்திகேயன்.

குறைந்த முதலீட்டில் இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான தொடக்க விழாவை தனது சொந்த ஊரான திருப்பூரில் மிக எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார் கார்த்திகேயன்.

வேல்முருகன் வேறுயாருமல்ல, இவர் ஏற்கனவே ரஞ்சித்தை வைத்து நேசம்புதுசு என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil