twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லதா ரஜினியின் 'ஆனந்தவனா' மழலையர் பள்ளி!

    By Staff
    |

    Latha with Soundarya
    நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, சென்னையில் 'ஆனந்த வனா' என்ற இன்னொரு பள்ளியைத் துவக்குகிறார்.

    இதுகுறித்து லதா கூறுகையில்,

    ஆரோக்கியமான குழந்தைப் பருவமே நல்ல மனிதர்களை உருவாக்க முடியும். ஒழுக்கமான, அர்த்தமுள்ள கல்வி முறையினால், மட்டுமே, இப்படிப்பட்ட மனிதர்களைக் கொடுக்க முடியும். அதற்கு தரமான அடிப்படைக் கல்வியை சரியான நேரத்தில் நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

    இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்தி க்கொண்டு, நான் சின்னஞ்சிறு நல்ல உள்ளங்களுக்காக, அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 1991ம் ஆண்டு "ஆஷ்ரம்'' பள்ளிக்கூடத்தைத் தொடங்கினேன். அது இன்று பல கிளைகளாக வளர்ந்துள்ளது.

    படிக்கும் காலத்திலேயே அவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக ஆஷ்ரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறோம். படிப்பு மட்டுமின்றி அதற்கேற்ப தனி ஆஷ்ரம் கல்வி முறையை வகுத்துள்ளோம். (டாஸ்க்' கல்வித்திட்டம்).

    இது சிபிஎஸ்ஸி, மாநிலக் கல்வி முறையைப் போன்று தனியானதொரு பாடத் திட்டம்.

    டாஸ்க்கின் செயல்பாடுகள், மாணவர்கள் இன்னும் உயர்ந்த நிலைக்குப் போக வேண்டும் என்ற கொள்கையை நோக்கிச் செல்கிறது. இது ஐசிஎஸ்சி' பாடத்திற்கு இணையானதாக அமையும்.

    அந்த வகையில், இப்போது இளம் பிஞ்சுகளுக்காக "ஆனந்தவனா'' என்ற பெயரில் பள்ளிக் கூடம் தொடங்கப்பட்டது.

    இது மற்ற கின்டர் கார்டன் பள்ளிகளைவிட வித்தியாசமானதாகவும், மேம்பட்டதாகவும் இருக்கும். பிஞ்சு உள்ளங்களை புண்படுத்துவதாக கல்வி அமையக் கூடாது என்ற எண்ணத்தில் "ஆனந்தவனா'' தொடங்கப்படுகிறது. இங்கு வரும் குழந்தைகள் சந்தோஷமாக இருக்கும். கல்வியைத் திணிக்கும் போக்கு இருக்கக்கூடாது. குழந்தைகள் அவர்கள் போக்கில் கற்க வேண்டும்.

    குழந்தைகள் எப்போதும் வரலாம்!

    இந்த பள்ளிக் கூடம் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளிலும் செயல்படும். எப்போது வேண்டுமானாலும் குழந்தைகள் ஆனந்தவனா பள்ளிக்கு வரலாம். ஆனந்தமாக கல்வி பெறலாம். ஆனந்தவனா பள்ளிக்கு குழந்தைகளை தனியாக அனுப்பக்கூடாது. உறவினர் யாராவது ஒருவரின் துணையோடுதான் குழந்தை பள்ளிக்கு வரவேண்டும். குழந்தையுடன் வரும் உறவினர்கள் அவர்களுடனேயே இருந்து பின்னர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    5-வது வகுப்பு வரையில் ஆனந்தவனா' பள்ளியில் படிக்கலாம். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று இல்லாமல், ஒவ்வொரு வகுப்புக்கும் பட்டர்பிளை' ரோஸ்' என்று பெயர் சூட்டி உள்ளோம். 5 ஆண்டு படிப்பு முடிந்ததும் வழக்கமான மேல் நிலைப்பள்ளிக்குச் செல்லலாம்.

    ஆனந்தவனா பள்ளிக்கூடம் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைக்கப்பட்டு உள்ளது. 1ம் தேதி திறக்கப்படுகிறது. படிப்படியாக சென்னையில் மற்ற பகுதிகளிலும், மற்ற மாவட்டங்களிலும் ஆனந்தவனா பள்ளி திறக்கப்படும் என்றார் லதா.

    இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X