»   »  ரீ-மிக்ஸ்: 'மூளை கெட்டவங்க வேலை'-டி.எம்.செளந்தரராஜன்

ரீ-மிக்ஸ்: 'மூளை கெட்டவங்க வேலை'-டி.எம்.செளந்தரராஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
T.M.Soundrarajan
பழைய பாடல்களை ரீ மிக்ஸ் செய்வது மூளை இல்லாத செயல் என்று பழம்பெரும் சினிமா பின்னனி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் கூறியுள்ளார்.

டி.எம்.செளந்தரராஜனுக்கு பாராட்டி விழா நடத்தவுள்ளார் முதல்வரின் மகன் மு.க. அழகிரி. இந் நிலையில் மதுரையில் உள்ள அழகிரியின் வீட்டிற்குச் சென்ற டி.எம்.செளந்தரராஜன் அவருக்கு நன்றியும் பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்தார்.

பின்னர் டிஎம்எஸ் கூறுகையில்,

எனது வயதுக்கும், குரலுக்கும் சம்பந்தம் கிடையாது. இது முருகன் கொடுத்த குரல். முருகன் பக்தியையும் அவனது அருளும் தான் என்னை காப்பாற்றி வருகிறது. அவனது அருளாசிகளை பரப்ப வந்த நான் அன்புக்கு மட்டுமே அடிமை. எனக்கு காக்கா பிடிக்க தெரியாது.

நாட்டில் நாத்தீகன், ஆத்தீகன் என்று யாரும் கிடையாது. அனைவரும் கடைசியில் ஆண்டவனிடம் தான் செல்கிறோம்.

திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் மு.க. அழகிரிக்கும் நன்றி உணர்வும், பாசமும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கருணாநிதி நல்லாட்சி நடத்தி வருகிறார்.

அந்த காலத்தில் நான் சினிமா பாடல்களை பாடியதற்கு ரூ.500 மட்டுமே சம்பளமாக தரப்பட்டது. ஆனால் இன்று என்னை பாட வைத்து ரூ.1 லட்சம் வரை கொடுக்கின்றனர்.

எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். அவர்களுடன் நெருங்கி பழகிய நண்பர்களில் நானும் ஒருவன். பெரும்பாலும் அனைத்து நடிகர்களுக்காவும் நான் பாடியுள்ளேன்.

தற்போது பழைய சினிமா பாடல்களை ரீ-மிக்ஸ் என்ற பெயரில் நாசப்படுத்தி வருகின்றனர். இது மூளை இல்லாதவர்கள் செய்யும் செயல் என்பதையே காட்டுகிறது. பழைய பாடல்களை நாசம் செய்யும் இவர்களது தரம் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும் என்றார்.

பேட்டியின் போது மு.க. அழகிரியின் வேண்டுகோளுக்கினங்க நீ எங்கே, என் நினைவுகள் அங்கே என்ற பாடலை ெசளந்தரராஜன் பாட கைதட்டி ரசித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil