»   »  மீண்டும் பாலு மகேந்திரா!!

மீண்டும் பாலு மகேந்திரா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Malavika
'காமரா கவிஞன்' பாலு மகேந்திரா பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்க வருகிறார். இந்த முறை அவர் எடுத்துக் கொண்டுள்ள கதைக்கு கோடை விடுமுறை என அழகாக பெயர் சூட்டியுள்ளார் பாலு.

பாலு மகேந்திரா படம் இயக்கி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாகி விட்டது. கடைசியாக அவர் இயக்கிய படம் தனுஷ், பிரியா மணி நடித்த அது ஒரு கனாக்காலம். அதன் பின்னர் அவருக்கு புதிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் பாலு மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இது அவருக்கு 27வது படைப்பு. இப்படத்துக்கு கோடை விடுமுறை என பெயரிட்டுள்ளார் பாலு.

இளம் காதலர்களின் கதை இது. இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைக்கத் தீர்மானித்துள்ளார் பாலு மகேந்திரா. இதற்குப் பொருத்தமான நடிகர், நடிகைகளை தேட ஆரம்பித்துள்ளார்.

படத்தில் ஒரு பெண்ணின் கேரக்டர் இருக்கிறதாம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கேரக்டருக்கு மாளவிகாவை நடிக்க வைக்கத் தீர்மானித்து அவரை அணுகியுள்ளாராம் பாலு. ஆனால் இதுவரை மாளவிகா எந்தப் பதிலும் சொல்லவில்லையாம்.

படத் தொடக்கத்திற்கு நாள் குறித்தவுடன் படம் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பாலு மகேந்திரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil