For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சேரன் கேட்ட பகிரங்க மன்னிப்பு!

  By Staff
  |

  Cheran with Ramya
  அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவது பெரும் தர்மசங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இது நன்கு தெரிந்தும்கூட இயக்குநர் சேரன் திரும்பத் திரும்ப உணர்ச்சி வசப்பட்டு வம்பில் மாட்டிக் கொள்கிறார்.

  நிலைமை எல்லை மீறியதும் வழக்கம் போல் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் அதே பாணியை இன்னும் தொடர்கிறார்.

  இதோ நேற்று நடந்த ஒரு சம்பவம்.

  மோசர்பேயர் தயாரிப்பில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள ராமன் தேதிய சீதை படத்தின் இசை வெளியீட்டு விழா.

  பாக்யராஜ், அமீர், ராம நாராயணன், கலைப்புலி எஸ் தாணு என தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட விழாவில் கடைசியாகப் பேசினார் சேரன்.

  அவர் பேசியதன் ஒரு பகுதி:

  ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. இதுதான் நம்ம குணம். என்னைப் பற்றி நிறைய மோசமான விமர்சனங்கள் வருகின்றன. இந்த படத்தின் கிளைமாக்சை மாற்றும்படி டைரக்டர் ஜெகனிடம் நான் சண்டை போட்டதாக ஒரு வாரப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள்.

  நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. ஜெகன் என்ன நினைத்தாரோ அந்த கிளைமாக்ஸ்தான் படத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

  எனக்கும், ஜெகனுக்குமான கருத்து வேறுபாடு படம் சம்பந்தப்பட்டது அல்ல. மனசு சம்பந்தப்பட்டது. அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நானும், நான் நன்றாக இருக்க வேண்டும் என்று அவனும் விரும்புகிறவர்கள். ஒரு அண்ணனுக்கும், தம்பிக்குமான பிரச்சினை அது.

  பொக்கிஷம்' படப்பிடிப்பில் பத்மப்ரியாவை நான், (ஒரு தவறான வார்த்தையை சொல்லி) செல்லமாக அழைத்ததாக ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் அப்படி அழைக்கவில்லை. அட (மொத்தத்தில் பத்திரிக்கையாளர்களை அதே தவறான வார்த்தையை சொல்லி குறிப்பிட்டு) ... அப்படி அழைக்க பத்மப்ரியா என் காதலியா, பெண்டாட்டியா அல்லது... (மீண்டும் ஒரு மோசமான வார்த்தை சொல்கிறார்). அவளை நான் ஏன் அப்படிக் கூப்பிடணும்.

  அப்படி அழைப்பதற்கு வேறு சில பெண்களை வைத்திருக்கிறேன். அந்த லிஸ்ட்டைத் தரட்டுமா?

  ஊருக்குப் போறேன்!

  இப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன். கிராமத்திலேயே இருந்திருப்பேன்.

  2 வருடங்களில் கடனை எல்லாம் அடைத்துவிட்டு, ஒரு பெரிய கும்பிடு போட்டு நான் ஊருக்கே போய்விடுகிறேன், சாமி. ஊரில் உள்ள என் ஆத்தா-அய்யாவுடன் அப்பழுக்கில்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன்...., என்று பேசிக்கொண்டே போனார்.

  பத்திரிகையாளர்கள் ஆவேசம்:

  உடனே பத்திரிகையாளர்கள் அனைவரும் சேரனின் ஆபாசப் பேச்சைக் கண்டிக்கும் விதத்தில் அரங்கை விட்டு வெளியேற, நிகழ்ச்சி அப்படியே ஸ்தம்பித்துப் போனது. சமாதானப்படுத்த ஓடோடி வந்தார் இயக்குநர் அமீர். அவருக்குப் பின்னால் சேரனும் வந்தார்.

  தங்களை சேரன் தவறான வார்த்தையால் திட்டியதை அனைத்துப் பத்திரிகையாளர்களும் கண்டித்து, உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

  உடனே சேரன், தனது தவறான வார்த்தைப் பிரயோகத்துக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார்.

  நான் தவறாகப் பேசிவிட்டேன். வேண்டுமானால் என்னை ஒரு அடி அடித்துவிடுங்கள் என்றார் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு. அவரை ஏற இறங்கப் பார்த்த அனைத்துப் பத்திரிகையாளர்களும் பின்னர் அமைதியாய் கலைந்து சென்றனர்!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X