twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'காதல் ஓசை'!

    By Staff
    |

    Kadalosai movie still
    உண்மையான உறவுக்கும் பாசத்துக்கும் ஏங்கும் நாயகன், ஆனால் அந்த ஏக்கத்தை தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் சொந்தங்கள்... இதன் நடுவே ஒரு தென்றலாய் வந்து ஆறுதல் தரும் காதலி... ஒரு அழுத்தமான கதைக்காத ஏங்குபவர்களுக்காகவே வருகிறது காதல் ஓசை திரைப்படம்.

    பாவானை ஸ்ரீ கிரியேஷன்ஸ் எனப் புதிய நிறுவனம் சார்பில் கே.பி.இந்திரா கணேசன், சுப்பராயுடு தயாரிக்கும் காதல் ஓசை திரைப்படத்தில் புதுமுகம் ரித்திக் ஹீரோ. காதலியாக வருகிறார் புதுமுகம் ராக்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் இந்திரா கணேசன்.

    கதை என்னங்க கணேசன் என்று இந்திரா கணேசனிடம் கேட்டபோது,
    இன்னறைய இளைஞர்களுக்குப் பிடித்தமான படமாக காதல் ஓசை இருக்கும். இது எனது முதல் படம். அனைத்து ரசிகர்களும் தங்கள் குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கும் விதத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறேன்.

    தன்னைச் சுற்றிலும் அன்பும் பாசமும் பொழியும் உறவுகளாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறான் நாயகன். ஆனால் அவர்களோ அவனை தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் அவன் வாழ்க்கையில் வருகிறாள் ஒரு காதலி. ஆனால் அவளுடன் சேர விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள் சுயநல சொந்தக்காரர்கள். இந்த சிக்கலைத் தகர்த்து காதலியை எப்படி அடைகிறான் நாயகன் என்பதே காதல் ஓசை படத்தின் கதை.

    இந்தப் படம் எடுக்கும்போது நடிகர்களும், டெக்னீசியன்களும், படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது..." என்கிறார்.

    மணீஷ் இசையில் கவிஞர் விவேகா 5 பாடல்களை எழுதியுள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை பவர் பாஸ்ட் அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் கலோரி. இணைத் தயாரிப்பு சி.வாசுகி தங்கவேல். தயாரிப்பு நிர்வாகம் பி.கார்த்திக், ஏகாம்பரம்.

    'சவுண்டா' காதலைச் சொல்லுங்க!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X