twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிவண்ணன் குடும்பம் மீது நடவடிக்கை கோரி ஸ்டெபி வழக்கு

    By Staff
    |

    Stephy and Raghuvannan
    இயக்குநர் மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குடும்பப் பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பெண் உதவி இயக்குநர் ஸ்டெபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்டெபி. 20 வயதாகும் இவர் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் மீது போலீஸீல் பரபரப்புப் புகார் கொடுத்தார்.

    தன்னுடன் மிக நெருக்கமாக பழகி, ரகசியத் திருமணம் செய்து கொண்டு விட்டு ரகுவண்ணன் தன்னுடன் குடும்பம் நடத்த மறுப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும் இருவரும் மிக நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாயின.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் இரு தரப்பலும் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் இதுவரை ரகுவண்ணன் மீது வழக்கு எதுவும் பதிவாகவில்லை.

    இந்த நிலையில், ஸ்டெபி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ரகுவண்ணனும், நானும் ஒருவரையொருவர் காதலித்தோம். 8 மாதமாக எங்கள் காதல் நீடித்தது. என்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவரிடம் கேட்டேன். இதற்கு ரகுவண்ணனும் சம்மதித்தார். 28.12.2007 அன்று போனில் என்னை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார். திருமணத்திற்கு தனது பெற்றோர் சம்மதித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, நான், அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டில் அவரை தவிர, வேறு யாரும் இல்லை. ஆனால், அவர் அவரது பாட்டி போட்டோ முன்பு வைத்து எனக்கு தாலி கட்டினார். எனக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், அவரோடு சேர்த்து என்னை படம் எடுத்துக்கொண்டார்.

    நாங்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்க்கை நடத்தினோம். ஆனால், என்னை, அவரது வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை. உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று வற்புறுத்தியும் அவர் அழைத்து செல்ல மறுத்து விட்டார். ஆனால், ரகுவண்ணனும், அவரது குடும்பத்தாரும் என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

    போலீசாரும், ரகுவண்ணனும், என்னை அச்சுறுத்துகிறார்கள். ரகுவண்ணன் மட்டுமல்லாமல், சீமான், தமிழ்செல்வன் ஆகியோர் என்னை மிரட்டுகிறார்கள்.

    எனக்கு நேர்ந்த கதி குறித்து 23.4.2008 அன்று சென்னை விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். புகார் கொடுத்தவர் என்ற பெயரில் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். ஆனால், எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

    நான் கூறிய குற்றச்சாட்டு குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும். ஆனால், போலீசார் 2 பேரும் காதலித்தீர்கள், ஒன்றாக இருந்தீர்கள் என்ற காரணத்திற்காக இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள்.

    ஆகவே, நான் கொடுத்த புகாரை குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து, ரகுவண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த மனு வருகிற செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X